தேசியம்
செய்திகள்

அடுத்த பொதுத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை – மேலும் மூன்று Liberal கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் அறிவித்தல்!

மூன்று Liberal கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடுத்த பொதுத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என ஞாயிற்றுக்கிழமை அறிவித்தனர்.

Liberal  கட்சியின் ஒன்பது  நாடாளுமன்ற உறுப்பினர்கள் Karen McCrimmon, Adam Vaughan, Will Amos ஆகியோர் அடுத்த பொதுத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என அறிவித்துள்ளனர்.

Vaughan முதல் தடவையாக 2014ஆம் ஆண்டும் (இடைத் தேர்தலில்), McCrimmon, Amos ஆகியோர் 2015ஆம் ஆண்டும் நாடாளுமன்ற உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள்.

McCrimmon, 2015ஆம் ஆண்டு முதல் பல அமைச்சர்களுக்கு நாடாளுமன்ற செயலாளராக பணியாற்றியுள்ளார். அவர் தற்போது, தேசிய பாதுகாப்புக்கான நாடாளுமன்ற குழுவின் தலைவராக உள்ளார்.

McCrimmon பிரதிநிதித்துவப் படுத்திய Kanata-Carleton தொகுதியில் Liberal கட்சியின் வேட்பாளராக கனடிய வங்கியின் முன்னாள் தலைவர் Mark Carney போட்டியிடலாம் என கட்சி வட்டாரங்கள் மூலம் தெரியவருகின்றது.

இந்தத் தொகுதியில் Ottawa நகரின் முன்னாள் பிரதி முதல்வர் Jenna Sudds போட்டியிட விரும்பம் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Vaughan இப்போது செயலிழந்துள்ள Trinity – Spadina தொகுதியில் 2014ஆம் ஆண்டின் இடைத் தேர்தலில் முதலில் தேர்ந்தெடுக்கப்பட்டார். தற்போது Spadina – Fort York தொகுதியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அவர், குடும்பங்கள், குழந்தைகள், சமூக மேம்பாட்டு அமைச்சரின் நாடாளுமன்ற செயலாளராக பணியாற்றுகிறார்.

Amos, 2019ஆம் ஆண்டு முதல் இந்த ஆண்டு ஆரம்பம் வரை புதுமை, அறிவியல், தொழில்துறை அமைச்சரின் நாடாளுமன்ற செயலாளராக பணியாற்றியவர்.

இவர்கள் மூவரின் இந்த அறிவித்தல் கோடை காலத்தின் பிற்பகுதியில் பரவலாக எதிர்பார்க்கப்பட்ட தேர்தலுக்கான அழைப்புக்கு முன்னர் வெளியானது. ஏற்கனவே ஒன்பது Liberal கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீண்டும் அடுத்த தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என அறிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

Related posts

கனடிய அரசின் அவசர நடவடிக்கைகளில் April மாதம் 4ஆந் திகதி புதிதாக அறிவிக்கப்பட்டவை | (English version below)

thesiyam

Ontarioவை மீண்டும் திறக்கும் திகதியை முன் நகர்த்துவது குறித்து முதல்வர் பரிசீலனை?

Gaya Raja

கடினமான December மாதம் குறித்து எச்சரித்த Quebec பொது சுகாதார இயக்குனர்

Lankathas Pathmanathan

Leave a Comment

error: Alert: Content is protected !!