தேசியம்
செய்திகள்

Ontarioவின் 18ஆவது முதல்வர் Bill Davis மரணம்!

Ontarioவின் 18ஆவது முதல்வர் Bill Davis மரணமடைந்தார்.Bramptonனில் உள்ள தனது இல்லத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை Davis மரணமடைந்ததாக அவரது குடும்பத்தினர் அறிவித்தனர்.

கனடாவில் மிக நீண்ட காலம் பதவியில் இருந்த முதல்வர்களில் ஒருவரான Davis, Ontarioவில் மிக நீண்ட காலம் பதவியில் இருந்த இரண்டாவது முதல்வராவார்.

1959ஆம் ஆண்டு முதல் Bramptonனில் தொடர்ந்து ஏழு முறை மாகாணசபை உறுப்பினராகத் தெரிவான இவர்,1971ஆம் ஆண்டு Ontario மாகாண Progressive Conservative கட்சியின் தலைவராகத் தெரிவானார்.

பின்னர் 1971ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து நான்கு தேர்தல்களில் வெற்றிபெற்ற David மாகாண முதல்வராக செயலாற்றியவர்.

முதலாவது உலகப் போருக்கு பின்னர் Ontarioவில் வேறு எவரும் நான்கு தேர்தல்களில் முதல்வராக வெற்றி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

1985ஆம் ஆண்டு Davis அரசியலில் இருந்து ஓய்வுபெற்றார். இறக்கும்போது அவரது வயது 92ஆகும்.

Related posts

வார விடுமுறை முழுவதும் தொடரவுள்ள அவசரகாலச் சட்டம் மீதான விவாதம்

Lankathas Pathmanathan

வேகமாக வளர்ந்து வரும் மக்கள் தொகை

Lankathas Pathmanathan

தேசியத்தின் ஆசனப் பகிர்வு கணிப்பு

Gaya Raja

Leave a Comment

error: Alert: Content is protected !!