தேசியம்
செய்திகள்

தடுப்பூசிக்கு இடையிலான 16 வார கால இடைவெளியை குறைக்கும் நிலையில் கனடா: வைத்தியர் Edward Njoo

COVID  தடுப்பூசி வழங்கலுக்கு இடையிலான 16 வார கால இடைவெளியை குறைக்கும் நிலையில்  கனடா உள்ளதாக பொது சுகாதார துணை தலைமை  அதிகாரி வைத்தியர் Edward Njoo கூறினார்.

கனடாவுக்குள் அதிக எண்ணிக்கையில் தடுப்பூசிகள் வந்தடையும் நிலையில் இந்த சாத்தியக்கூறு தோன்றியுள்ளது. Manitobaவில், குறிப்பிட்ட பாதிக்கப் படக்கூடியவர்களுக்கு நாளை முதல் இரண்டாவது தடுப்பூசி வழங்கப்படுகின்றது.

Ontario, சுகாதாரப் பணியாளர்களுக்கும்  உயர் ஆபத்துள்ள குழுக்களில் உள்ளவர்களுக்கு தடுப்பூசி வழங்கும் இடைவெளிகளைக் இந்த வாரம் குறைத்தது. Quebecகும் இதுபோன்ற ஒரு நகர்வை மேற்கொண்டுள்ளது.

Albertaவும் Saskatchewanனும் தடுப்பூசி  கால வரிசையில் விவரிக்கும் திட்டங்களை வெளியிட்டுள்ளன. British Colombia இரண்டாவது தடுப்பூசிக்கான திகதியை முன் நகர்த்துவதற்கான முடிவை எடுக்கும் முன்னர் தமக்கான தடுப்பூசி விநியோகத்தை கண்காணிப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related posts

பிரதமர் Remembrance தின நிகழ்வில் தாமதமாக கலந்து கொண்டார்!

Gaya Raja

இரண்டு தமிழர்கள் மரணமடைந்த விபத்து குறித்த மேலதிக விபரங்கள்

Lankathas Pathmanathan

Manitoba மாகாணப் பூர்வகுடி தலைவர்கள் சம்மேளனத் தலைவி மரணம்

Lankathas Pathmanathan

Leave a Comment