தேசியம்
செய்திகள்

அதிகரிக்கும் தொற்றுக்களுக்கு மத்தியில் Manitobaவில் மேலும் கட்டுப்பாடுகள் அறிவிப்பு

Manitobaவில் வியாழக்கிழமை ஒரு நாளுக்கான அதிக COVID தொற்று பதிவாகியது.

வியாழக்கிழமை 603 தொற்றுக்களை சுகாதார அதிகாரிகள் பதிவு செய்தனர். இதற்கு முன்னர் ஒரு நாளுக்கான அதிக தொற்றுக்கள் May மாதம் 13ஆம் திகதி பதிவானது. அன்று  560 தொற்றுக்களை அதிகாரிகள் அறிவித்தனர்.

வியாழக்கிழமையுடன் Manitobaவில் மொத்தம் 46 ஆயிரத்து 916 தொற்றுக்கள் பதிவாகியுள்ளன. இதுவரை 1,019 பேர் தொற்றின் காரணமாக மரணமடைந்துள்ளனர்.

இந்த நிலையில்  நீண்ட வார இறுதிக்கு முன்னதாக புதிய கட்டுப்பாடுகள் Manitobaவில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஒரே வீட்டுக்கு வெளியே உள்ளவர்களுடன் ஒன்றுகூடுவது தடைசெய்யப்பட்டுள்ளது.

Related posts

Torontoவில் காணாமல் போயுள்ள தமிழ் பெண்

Lankathas Pathmanathan

Alberta ஓட்டுநர் உரிமத் திட்டம் மாற்றம்

Lankathas Pathmanathan

KHL அணிகளில் உள்ள கனேடிய வீரர்களை அங்கிருந்து வெளியேறுமாறு கனடா வலியுறுத்தல்

Lankathas Pathmanathan

Leave a Comment