தேசியம்
செய்திகள்

தடுப்பூசி பெற மறுத்ததால் கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட மாகாண சபை உறுப்பினர்!

Ontario மாகாண Progressive Conservative கட்சியின் மாகாண சபை உறுப்பினர் Rick Nicholls கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

COVID தொற்று தடுப்பூசி பெற மறுத்த நிலையில் இவரை கட்சியில் இருந்து வெளியேற்றுவதாக முதல்வர் Doug Ford தெரிவித்தார்.

Chatham-Kent-Leamington தொகுதியின் மாகாணசபை உறுப்பினரான இவரும், இவரது மனைவியும் தனிப்பட்ட காரணத்திற்காக தடுப்பூசியைப் பெறுவதில்லை என முடிவு செய்ததாக தெரிவித்தனர்.

தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் முன்னுதாரணமாக இருக்க வேண்டும் என கூறிய முதல்வர் Ford, தடுப்பூசியைப் பெறாததற்கு நியாயமான காரணத்தை வழங்க Nicholls தவறி விட்டதாக கூறினார்.

இதனால் அவரை கட்சியில் இருந்து விலக்குவதாகவும், அடுத்த தேர்தலில் Progressive Conservative கட்சியின் சார்பில் அவர் போட்டியிட அனுமதிக்கப்படமாட்டார் எனவும் Ford அறிவித்தார்.

தடுப்பூசி போடப்படாத இரண்டு Progressive Conservative கட்சியின் மாகாண சபை உறுப்பினர்களில் Nichollsம் ஒருவராவார்.

Scarborough மத்திய தொகுதியின் மாகாண சபை உறுப்பினர் Christina Mitas மருத்துவ காரணத்திற்காக தடுப்பூசி பெறவில்லை என தெரியவருகிறது.

Related posts

சரக்கு புகையிரதங்கள் மோதியதில் ஒருவர் காயம்

Gaya Raja

மத்திய பல் மருத்துவ திட்டத்திலிருந்து Alberta விலகல்

Lankathas Pathmanathan

தடுப்பூசியை முழுமையாக பெறுவது தொற்றில் இருந்து முழுமையான பாதுகாப்பு பெறுவது என அர்த்தப்படாது: Theresa Tam

Gaya Raja

Leave a Comment