ஆப்கானிஸ்தானில் இருந்து மக்களை வெளியேற்ற கனடா அனைத்து முயற்சிகளையும் கையிலெடுக்கும் என கனடாவின் குடிவரவு, அகதிகள், குடியுரிமை அமைச்சர் தெரிவித்தார்.
ஆப்கானிஸ்தானில் இருந்து எவ்வளவு பேரை விரைவாக வெளியேற்ற முடியுமோ அதற்கான முழு முயற்சியையும் கனடா எடுக்கும் என அமைச்சர் Marco Mendicino கூறினார்.
ஆனாலும் அந்த செயல்முறை குறித்த மேலதிக விவரங்களை அவர் வெளியிடவில்லை.
ஆப்கானிஸ்தானில் கனேடிய பணியை ஆதரித்த ஊழியர்களையும், மொழி பெயர்ப்பாளர்களையும் கனடா முடிந்தவரை அகற்ற முயற்சிக்கிறது எனவும் அவர் கூறினார்.
கனடாவால் இதுவரை 1,000 பேரை நாட்டை விட்டு வெளியேற்ற முடிந்துள்ளதாக கூறிய அமைச்சர் இந்தப் பணி நாளடைய நாளடைய மேலும் சவாலாக மாறுவதாகவும் தெரிவித்தார்.