தேசியம்
செய்திகள்

தனது booster தடுப்பூசியை அங்கீகரிக்குமாறு Health கனடாவிடம் கோரும் Moderna!

Moderna நிறுவனம் தனது COVID booster தடுப்பூசியை அங்கீகரிக்குமாறு Health கனடாவிடம் கோரி, தனது booster தடுப்பூசியின் தரவுகளை Health கனடாவிடம் சமர்ப்பித்துள்ளது.

இது குறித்த விண்ணப்பத்தை Modernaவிடம் இருந்து பெற்றதாகக் கூறும் Health கனடா, சுயாதீனமானதும் சான்றுகள் அடிப்படையிலுமான மதிப்பாய்வை நடத்துவதாக கூறுகிறது.

கனடாவில் பொது சுகாதார நிறுவனமும்,தடுப்பூசி நிபுணர்களும் பெரும்பாலான கனேடியர்களுக்கு booster தடுப்பூசிகளை பரிந்துரைப்பதில் ஆர்வம் காட்டவில்லை.

இதுவரை தடுப்பூசிகள் கடுமையான நோய்களுக்கு எதிராக வலுவான பாதுகாப்பை காட்டுவதனால் இந்த நிலையை பொது சுகாதார நிறுவனமும் தடுப்பூசி நிபுணர்களும் எடுத்துள்ளனர்.

நீண்டகால பராமரிப்பு இல்லங்களில் அல்லது சமரசம் செய்யப்பட்ட நோய் எதிர்ப்பு நிலையில் உள்ளவர்கள் மூன்றாவது தடுப்பூசியை பெறவேண்டும் என நோய்த் தடுப்புக்கான தேசிய ஆலோசனைக் குழு கடந்த மாதம் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

Manitoba மாகாணத்திற்கான இலங்கை தூதர் நியமனம்

Lankathas Pathmanathan

புதிய தனிமைப்படுத்தல் விதி விலக்கிலிருந்து கனேடியர்களை விலக்கும் நாடுகள்!

Gaya Raja

பணயக் கைதிகளை உடனடியாக விடுதலை செய்ய ஹமாசுக்கு கனடிய பிரதமர் அழைப்பு

Lankathas Pathmanathan

Leave a Comment