தேசியம்
செய்திகள்

Pearson விமான நிலையத்தில் திருடப்பட்ட தங்கம் இந்தியா அல்லது துபாயில்?

Toronto Pearson சர்வதேச விமான நிலையத்தில் திருடப்பட்ட தங்கம் இந்தியா அல்லது துபாய்க்கு கொண்டு செல்லப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது.

2023இல் Pearson சர்வதேச விமான நிலையத்தில் இருந்து திருடப்பட்ட தங்கத்தின் பெரும்பகுதி வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்டு, விற்கப்பட்டு, உருக்கப்பட்டிருக்கலாம் என காவல்துறையினர் நம்புகின்றனர்.

திருடப்பட்ட தங்கத்தில் ஒரு சிறிய தொகை Toronto பகுதியில் உள்ள நகைக்கடையில் உருக்கப்பட்டதாகவும், மீதமுள்ளவை வெளிநாட்டிற்கு அனுப்பப்பட்டதாகவும் நம்பப்படுகிறது.

இந்த திருட்டின் பின்னர் தங்கத்தின் பெரும் பகுதி துபாய் அல்லது இந்தியா போன்ற வெளிநாட்டுச் சந்தைகளுக்கு சென்றுள்ளதாக காவல்துறையினர் நம்புகின்றனர்.

6,600 தங்கக் கட்டிகள், 2.5 மில்லியன் டொலர் வெளிநாட்டு நாணயம் இதில் திருடப்பட்டது.

இந்தத் திருட்டுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் April 2024 இல், ஐந்து சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

மேலும் மூன்று சந்தேக நபர்களுக்கு நாடளாவிய ரீதியில் பிடியாணைகள் பிறப்பிக்கப்பட்டன.

அமெரிக்காவில் நான்காவது சந்தேக நபர் கைதாகியுள்ளார்.

சந்தேக நபர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

மேலதிக இரண்டு சந்தேக நபர்கள் இங்கிலாந்து, இந்தியா அல்லது துபாயில் மறைந்திருப்பதாக நம்பப்படுகிறது.

இந்த விசாரணைக்கு காவல்துறையினர் இதுவரை 5 மில்லியன் டொலருக்கும் அதிகமாக செலவு செய்துள்ளனர்.

Related posts

கனடாவுடனான எல்லை மீண்டும் விரைவில் திறக்கப்பட வேண்டும் என அமெரிக்கா விரும்புகிறதா?

Gaya Raja

Ontarioவில் 52 திருடப்பட்ட வாகனங்கள் மீட்பு

Lankathas Pathmanathan

இலங்கை அரச அதிகாரிகள் மீதான தடை கனடிய தமிழர்களின் கூட்டு வெற்றி: ஹரி ஆனந்தசங்கரி

Lankathas Pathmanathan

Leave a Comment