தடுப்பூசி பெறாத மாணவர்களுக்கு Ontario மாகாணம் September மாதம் வெவ்வேறு விதிகளைக் கொண்டிருக்கும் என தெரியவருகின்றது.Ontarioவின் உயர் மருத்துவர் Kieran Moore இந்த தகவலை வெளியிட்டார்.
September மாதத்தில் தடுப்பூசி போடப்படாத ஆயிரக்கணக்கான மாணவர்கள் தடுப்பூசி போட்டுக் கொண்ட மாணவர்களை விட வேறு தனிமைப்படுத்தல் விதிகளை எதிர்கொள்வார்கள் என அவர் கூறினார். புதிய பாடசாலை ஆண்டிற்கான மாகாணத்தின் தொற்று பரவல் தடுப்பு மேலாண்மை திட்டம் ,தடுப்பூசி நிலையின் அடிப்படையில் தனித்தனி விதிகளைப் பயன்படுத்துகிறது என அவர் கூறினார்.
தடுப்பூசி பெறாதவர்கள் COVID தொற்றுக்கு ஆளானால் வீட்டிலிருந்து கற்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பார்கள் எனவும் அவர் கூறினார்.