September 18, 2024
தேசியம்
செய்திகள்

அனுமதி மறுக்கப்படும் வெளிநாட்டு பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு!

கனடாவில் எல்லை அனுமதி மறுக்கப்படும் வெளிநாட்டு பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கிறது.

அண்மைய கனடிய எல்லை சேவைகள் முகமையகத்தின் (CBSA) தரவுகளில் இந்த விபரம் வெளியானது.

அதிகரித்த குடியேற்றவாசிகளின் அனுமதிக்காக மத்திய அரசாங்கம் தொடர்ந்து விமர்சனங்களை எதிர் கொள்ளும் நிலையில் இந்த விபரம் வெளியானது.

2024 ஆம் ஆண்டின் முதல் ஏழு மாதங்களில் CBSA சராசரியாக மாதத்திற்கு 4,000 வெளிநாட்டுப் பயணிகளை திருப்பி அனுப்பியுள்ளது.

2023 ஆம் ஆண்டின் இதே காலகட்டத்தில் திருப்பி அனுப்பப்பட்ட 3,271 பேருடன் ஒப்பிடுகையில் இது 20 சதவிகிதம் அதிகமாகும்.

2019 ஆம் ஆண்டின் முதல் ஏழு மாதங்களில், CBSA மாதத்திற்கு சராசரியாக 3,758 வெளிநாட்டுப் பயணிகளை திருப்பி அனுப்பியுள்ளது.

இந்த ஆண்டின் முதல் ஏழு மாதங்களில் 1.1 மில்லியனுக்கும் அதிகமான தற்காலிக விசாக்களை குடிவரவு, அகதிகள், குடியுரிமை திணைக்களம் அங்கீகரித்துள்ளது.

கடந்த ஆண்டு இதே காலத்தில் இந்த எண்ணிக்கை 1.3 மில்லியன் ஆகும்.

Related posts

Alaskaவில் சுட்டு வீழ்த்தப்பட்ட அடையாளம் காணப்படாத பொருள் கனேடிய வான்வெளியை நோக்கி பயணித்தது?

Lankathas Pathmanathan

இரண்டு வருடத்தில் 40 ஆயிரம் ஆப்கானியர்கள் கனடாவுக்கு அழைத்து வரப்படுவார்கள்: குடிவரவு அமைச்சர்

Lankathas Pathmanathan

Manitoba மாகாணத்திற்கான இலங்கை தூதர் நியமனம்

Lankathas Pathmanathan

Leave a Comment