தேசியம்
செய்திகள்

B.C. நெடுந்தெரு விபத்தில் மூவர் மரணம்!

British Colombia நெடுந்தெரு விபத்தில் 3 பேர் மரணமடைந்தனர்.
ஒரு குடும்பத்தை சேர்ந்த மூவர் இதில் மரணமடைந்ததாக RCMP கூறுகிறது
செவ்வாய்க்கிழமை (09) காலை இந்த விபத்து  Fraser Valley பகுதியில் நிகழ்ந்தது.
இரண்டு பெரியவர்கள், ஒரு குழந்தை இந்த விபத்தில் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
Tractor trailer, பயணிகள் வாகனத்துடன் மோதியதில் இந்த விபத்து நிகழ்ந்தது.
பயணிகள் வாகனத்தில் இருந்த இரண்டு பெரியவர்கள் சம்பவ இடத்தில் பலியானதாக RCMP கூறியது.
விபத்தில் காயமடைந்த குழந்தை விமானம் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட சில மணிநேரங்களுக்கு பின்னர் மரணமடைந்ததாக RCMP உறுதிப்படுத்தியது.
இதில் Tractor trailer ஓட்டுநருக்கு எந்த காயங்கள் எதுவும் ஏற்படவில்லை
இந்த விபத்துக்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரணையை முன்னெடுக்கின்றனர்.

Related posts

Floridaவில் தொடர் மாடிக் கட்டடம் இடிந்து விழுந்ததில் இரண்டு கனடியர்கள் பலி: கனடிய வெளிவிவகார அமைச்சு!

Gaya Raja

கனடிய ஏற்றுமதியாளர்கள் தங்கள் வருவாயில் பாதியை இழக்க நேரிடும் சாத்தியக்கூறு?

Lankathas Pathmanathan

Saskatchewan கத்தி குத்து சம்பவங்களில் பத்து பேர் மரணம் – 15 பேர் காயம்!

Lankathas Pathmanathan

Leave a Comment