தேசியம்
செய்திகள்

முதல்வர் Patrick Brownனின் பதவி காலம் முடிவுக்கு வர வேண்டும்: Brampton நகரசபை உறுப்பினர்கள் வலியுறுத்தல்

Brampton நகரசபையில் முதல்வர் Patrick Brownனின் பதவி காலம் முடிவுக்கு வர வேண்டும் என ஐந்து Brampton நகரசபை உறுப்பினர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

தங்கள் விரக்தியை வெளிப்படுத்தும் கடிதம் ஒன்றை ஐந்து Brampton நகரசபை உறுப்பினர்கள் வெளியிட்டனர்.

Brown தலைமையின் கீழ் நிரூபிக்கப்படாத நிதி முறைகேடுகள் குறித்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக தங்கள் விரக்தியை அவர்கள் வெளிப்படுத்தியுள்ளனர்.

Conservative கட்சியின் தலைமைப் போட்டியில் இருந்து Brown தகுதி நீக்கம் செய்யப்பட்ட 24 மணி நேரத்திற்குள் இந்த கடிதம் வெளியிடப்பட்டது.

நகர சபைக்கு வெளியே Brown முன்னெடுக்கும் நடவடிக்கைகளினால் Brampton நகருக்கு பாதிப்பு ஏற்படுவதாக நகரசபை உறுப்பினர்கள் கூறுகின்றனர்.

Conservative கட்சியின் தலைமைப் போட்டியில் Brown ஈடுபட ஆரம்பித்ததில் இருந்து Brampton நகரம் தலைமைத்துவம் இல்லாமல் உள்ளது என நகரசபை உறுப்பினர் Martin Medeiros தெரிவித்தார்.

Related posts

கடுமையான குளிர்கால வானிலை கனடாவின் சில பகுதிகளில் தொடர்கிறது

Lankathas Pathmanathan

Scarborough மதுபான விடுதி துப்பாக்கிச் சூட்டில் 12 பேர் காயம்

Lankathas Pathmanathan

ஐரோப்பாவில் நான்கு புதிய தூதரகங்களை திறக்கும் கனடா

Leave a Comment