தேசியம்
செய்திகள்

Calgary Stampede நிகழ்வைத் தவிர்க்கும் Liberal, NDP தலைவர்கள்?

Calgary Stampede நிகழ்வில் இந்த வருடம் பிரதமர் Justin Trudeau, NDP தலைவர் Jagmeet Singh ஆகியோர் கலந்து கொள்ள மாட்டார்கள்.

பிரதான அரசியல் கட்சிகளில் Conservative கட்சித் தலைவர் Pierre Poilievre கலந்து கொள்வது மாத்திரமே உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த வார விடுமுறையில் நடைபெறும் வருடாந்த நிகழ்வில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

வெளிப்புற நிகழ்வில் எதிர்கொள்ளப்படும் விமர்சனங்களை தவிர்க்க Liberal, NDP தலைவர்கள் இந்த நிகழ்வில் கலந்து கொள்வதை தவிர்ப்பதாக தெரியவருகிறது.

COVID பெருந்தொற்று காலம் தவிர, 2013 இல் Liberal கட்சியின் தலைவராக பொறுப்பேற்ற பின்னர், Justin Trudeau ஒவ்வொரு ஆண்டும் Calgary Stampede நிகழ்வில் கலந்து கொள்வது வழமையாகும்.

அண்மைய Toronto – St. Paul தொகுதி இடைத்தேர்தல் தோல்வியை அடுத்து தொகுதி உறுப்பினர்கள், நாடாளுமன்றக் குழு உறுப்பினர்களை சந்திப்பதை பிரதமர் தவிர்ப்பதாக விமர்சிக்கப்படுகிறது.

Calgary Stampede நிகழ்வில் கலந்து கொள்வதை தவிர்த்து Toronto பெரும்பாகத்தில் நடைபெறும் இஸ்லாமிய கலாச்சார நிகழ்வில் பிரதமர் கலந்து கொள்ளவுள்ளார்.

கடந்த பொதுத் தேர்தலில் Alberta மாகாணத்தில் Liberal கட்சி இரண்டு தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது.

Ontario மாகாணத்தில் தற்போது 74 நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர்.

NATO உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் திங்கட்கிழமை (08) காலை Washington பயணமாகவுள்ளார்.

Related posts

Manitoba முன்னாள் முதல்வரின் தொகுதிக்கான இடைத் தேர்தல்

Lankathas Pathmanathan

மருத்துவ உதவியால் இறப்பதற்கான தகுதியை நீட்டிப்பதை தாமதப்படுத்தும் சட்டமூலம்

Lankathas Pathmanathan

தேசிய மருந்தக கட்டமைப்பு சட்ட மூல வரவு தாக்கல்!

Lankathas Pathmanathan

Leave a Comment