தேசியம்
செய்திகள்

கனடிய மேல் சபை உறுப்பினர் COVID காரணமாக மரணம்

கனடிய மேல் சபை உறுப்பினர் (Senator) Josee Forest-Niesing COVID தொற்று காரணமாக மரணமடைந்தார்.

ஒரு வழக்கறிஞரும் மேல் சபை உறுப்பினருமான இவர், அண்மையில் COVID தொற்று காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற 56 வயதான இவர் கடந்த சனிக்கிழமை (November 14) வீடு திரும்பியதாக அவரது அலுவலகம் ஒரு அறிக்கையில் கூறியது.

Ontario மாகாணத்தின் Sudburyயை சேர்ந்த அவர் COVID தொற்றுக்கு எதிராக முழுமையாக தடுப்பூசி போடப்பட்டதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால் கடந்த 15 ஆண்டுகளாக அவரது நுரையீரலை பாதித்த ஒரு தாக்க நிலை காரணமாக பாதிக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அவர் October 2018 முதல் மேல் சபை உறுப்பினராக Ontarioவைப் பிரதிநிதித்துவப்படுத்தினார்.

இவரது மறைவுக்கு பிரதமர் Justin Trudeau உட்பட் பலரும் தமது இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.

Related posts

Quebec பனிப்பொழிவு காரணமாக மின்சாரத்தை இழந்த 106,000 வீடுகள்!

Lankathas Pathmanathan

கனடிய அரசின் அவசர நடவடிக்கைகளில் April மாதம் 9ஆந் திகதி புதிதாக அறிவிக்கப்பட்டவை | (English version below)

thesiyam

மீண்டும் ஒரு வட்டி விகித உயர்வை அறிவிக்கும் கனடிய மத்திய வங்கி

Lankathas Pathmanathan

Leave a Comment