September 11, 2026
தேசியம்
செய்திகள்

அமெரிக்க அதிபர் கனடாவுக்கு பயணம்

அமெரிக்க அதிபர் Joe Biden வியாழக்கிழமை (23) மாலை கனடாவுக்கான பயணத்தை ஆரம்பிக்கின்றார்.

வியாழன் மாலை Ottawa வந்தடையும் அமெரிக்க அதிபரை, ஆளுநர் நாயகம் Mary Simon தலைமையிலான குழுவினர் வரவேற்க உள்ளனர்.

தலைநகர் Ottawaவில் தங்கியிருக்கும் போது, Joe Biden ஆளுநர் நாயகம் Mary Simon, பிரதமர் Justin Trudeau ஆகியோரை சந்திப்பார்.

வெள்ளிக்கிழமை (24) அவர் நாடாளுமன்றத்தில் உரையாற்றவுள்ளார்.

தவிரவும் அமெரிக்க அதிபர் தனது பயணத்தின் போது வேறு சில நிகழ்வுகளில் கலந்து கொள்ள ஏற்பாடாகியுள்ளது.

கனடா-அமெரிக்க உறவுகளுக்கு முன்னுரிமைகள் வழங்ககப்படும் நிகழ்வுகளாக இவை அமையும் என தெரியவருகிறது.

Related posts

Ontarioவில் எரிபொருளின் விலை லீட்டருக்கு 7 சதத்தினால் குறையும்

Lankathas Pathmanathan

விமானச் சேவைகளின் எண்ணிக்கையைக் குறைக்க WestJet முடிவு

Lankathas Pathmanathan

COVID காரணமாக Brampton நகர Amazon பூர்த்தி மையம் மூடல் -பின்னணி என்ன?

Gaya Raja

Leave a Comment