தேசியம்
செய்திகள்

கனடா 13 million தடுப்பூசிகளை ஏழை நாடுகளுக்கு நன்கொடையாக வழங்குகின்றது!

கனடா 13 million COVID தடுப்பூசிகளை ஏழை நாடுகளுக்கு நன்கொடையாக வழங்கவுள்ளது.

ஞாயிற்றுக்கிழமை இங்கிலாந்தில் முடிவடைந்த G7 நாடுகளின் தலைவர்கள் மாநாட்டில் பிரதமர் Justin Trudeau உறுதிப்படுத்தினார். உபரிகளாக உள்ள தடுப்பூசிகளை ஏழை நாடுகளுக்கு நன்கொடையாக அளிக்க திட்டமிட்டுள்ளதாக பிரதமர் மாநாட்டின் இறுதியில் அறிவித்தார். இந்த நன்கொடைகள் கனடாவின் சொந்த நோய்த் தடுப்பு முயற்சிகளை பாதிக்காது என Trudeau கூறினார்.

நன்கொடை அளிக்கப்பட்ட தடுப்பூசிகளில் 7 மில்லியனுக்கும் அதிகமானவை Novovaxலிருந்து வந்தவை எனவும் அவை கனடாவில் பயன்படுத்த இன்னும் அனுமதிக்கப்படவில்லை எனவும் பிரதமர் அலுவலகம் தெரிவித்தது. மீதமுள்ளவை சர்வதேச தடுப்பூசி பகிர்வு முயற்சியான COVAX மூலம் கனடா கொள்வனவு செய்த Johnson & Johnson மற்றும்  AstraZeneca  தடுப்பூசிகளாகும்.

இதில் ஒரு தொகுதி தடுப்பூசிகள் ஏற்கனவே சில நாடுகளை சென்றடைந்துள்ளன. மேலும்  87 மில்லியன்  தடுப்பூசிகளுக்கான பணத்தை ஏழை நாடுகளுக்கு கனடா வழங்கவுள்ளது.

கனடா 100 மில்லியனுக்கும் அதிகமான தடுப்பூசிகளின் விநியோகத்தை உறுதிப்படுத்தியுள்ளது.

Related posts

இந்த மாதம் முதல் Ontarioவில் குழந்தைகளுக்கு தடுப்பூசி: தலைமை மருத்துவர் தகவல்

Lankathas Pathmanathan

இஸ்ரேல் -பாலஸ்தீன மோதலில் போர் நிறுத்தம் அவசியம்: கனடிய பிரதமர்

Gaya Raja

மூன்றாவது அலையை தடுக்க கடுமையான நடவடிக்கைகள் தேவை:பிரதமர் Trudeau

Gaya Raja

Leave a Comment

error: Alert: Content is protected !!