தேசியம்
செய்திகள்

இந்த மாத இறுதியில் Johnson & Johnson தடுப்பூசிகள் கனடாவை வந்தடையும்!

Johnson & Johnson, COVID தடுப்பூசிகளின் முதலாவது விநியோகம் இந்த மாத இறுதியில் கனடாவை வந்தடையவுள்ளது.கனடாவின் கொள்முதல் அமைச்சர் அனிதா ஆனந்த இந்தத் தகவலை வெளியிட்டார். இந்த மாத இறுதிக்குள் கனடா தனது முதலாவது Johnson & Johnson  தடுப்பூசியை பெற்றுக் கொள்ளுமென பிரதமர்  Justin Trudeau கூறினார்

கனடா 10 மில்லியன் Johnson & Johnson தடுப்பூசிகளை கொள்வனவு செய்துள்ளது. மேலதிகமாக 28 மில்லியன் தடுப்பூசிகளை கொள்வனவு செய்யவும் கனடா விருப்பம் தெரிவித்துள்ளது.  

அமெரிக்காவில் இரத்த உறைவு  பக்க விளைவு காரணமாக   Johnson & Johnson தடுப்பூசியை பயன்படுத்துவதை தற்காலிகமாக சுகாதார அதிகாரிகள் இடைநிறுத்தியுள்ளனர். இந்த நிலையில் இந்த விடயம் குறித்து  Health  கனடா அவதானித்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Johnson & Johnson தடுப்பூசிகள் Health  கனடாவினால் March மாதம் 5ஆம் திகதி பாவனைக்கு அனுமதிக்கப்பட்டது. 

Related posts

கனடாவுடன் கூட்டு ஒப்பந்தங்களுக்குக் கதவுகள் எப்போதும் திறந்தே இருக்கும்: France தூதர்!

Lankathas Pathmanathan

அடுத்த பொதுத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை – மேலும் மூன்று Liberal கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் அறிவித்தல்!

Gaya Raja

Congo பயணித்த வெளிநாட்டவர் கனடாவுக்குள் வரத்தடை?

Lankathas Pathmanathan

Leave a Comment