தேசியம்
செய்திகள்

பிரதமருக்கும் – துணைப் பிரதமருக்கும் இடையிலான உறவில் விரிசல்?

துணைப் பிரதமரும் நிதியமைச்சருமான Chrystia Freeland மீது முழு நம்பிக்கை கொண்டுள்ளதாக பிரதமர் Justin Trudeau தெரிவித்துள்ளார்.

Justin Trudeau அமைச்சரவையில் Chrystia Freelandடின் பங்கு குறித்த கேள்விகள் எழுந்துள்ள நிலையில் இந்த கருத்தை பிரதமர் தெரிவித்துள்ளார்.

Chrystia Freeland திறமைகள் குறித்து தனக்கு முழு நம்பிக்கை உள்ளதாக பிரதமர் Washingtonனில் வியாழக்கிழமை (11) செய்தியாளர்களிடம் கூறினார்.

Chrystia Freelandடின் செயல்திறன் குறித்து பிரதமர் அலுவலகத்தின் மூத்த அதிகாரிகள் கேள்வி எழுப்பியுள்ளதாக Globe and Mail செய்தி வெளியிட்டுள்ள நிலையில் பிரதமரின் இந்த கருத்து வெளியானது.

துணைப் பிரதமருக்கும் பிரதமர் அலுவலகத்துக்கும் இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளதாகவும் Globe and Mail செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த நிலையில் இங்கிலாந்து வங்கியின் முன்னாள் ஆளுநர் Mark Carneyயை அரசியலுக்கு அழைத்து வருவது குறித்து பேசி வருவதாகவும்  பிரதமர் Justin Trudeau உறுதிப்படுத்தினார்.

நிதி அமைச்சில் Chrystia Freelandடிற்குப் பதிலாக Mark Carneyயை நியமிப்பது குறித்த உரையாடல்கள் நிகழ்வதாக Toronto Star செய்தி வெளியிட்டுள்ளது.

Liberal கட்சியை தலைமை தங்குவதற்கு Mark Carney ஆர்வம் கொண்டுள்ளதாக முதலில் தகவல் வெளியாகியிருந்தது.

ஆனாலும் அடுத்த தேர்தலில் Liberal கட்சியை தலைமை தாங்க உள்ளதாக Justin Trudeau மீண்டும் வலியுறுத்தி வருகிறார்.

அதேவேளை Justin Trudeauவின் பதவிக்கு குறிவைப்பதாக வெளியாகும் செய்தியை Mark Carney மறுத்து வருகிறார்.

பிரதமர் Justin Trudeauவின் தலைமைத்துவம் குறித்து தொடர்ந்து கேள்விகள் தொடர்ந்து வெளியாகும் நிலையில் இந்தத் தகவல்கள் வெளியாகியுள்ளது.

கடந்த வாரம் Toronto – St. Paul தொகுதி இடைத் தேர்தலில் Liberal கட்சி தோல்வியை எதிர்கொண்டது பிரதமரின் பதவி விலகல் குறித்து கோரிக்கைகள் வலுவடைந்துள்ளது.

Related posts

கனடா வழங்கியுள்ள கடனை உக்ரைன் ஜனாதிபதி வரவேற்றார்

Lankathas Pathmanathan

கனடாவில் COVID தொற்றின் மொத்த எண்ணிக்கை 9 இலட்சத்து 50 ஆயிரத்தை தாண்டியது

Gaya Raja

NATO படையை வழி நடத்த கனடா இணக்கம்

Leave a Comment