September 16, 2026
தேசியம்
செய்திகள்

பணியின்போது உயிரிழந்த Toronto காவல்துறை அதிகாரியின் இறுதி அஞ்சலி

இந்த மாத ஆரம்பத்தில் Toronto காவல் துறையின் சோதனை நடவடிக்கையின்போது சுடப்பட்டு உயிரிழந்த காவல்துறை அதிகாரி தனது பணியில் மிகுந்த அர்ப்பணிப்புடன் செயல்பட்டவராக நினைவு கூரப்பட்டார்.

பணியின்போது உயிரிழந்த Toronto காவல்துறை அதிகாரியின் இறுதி அஞ்சலி நிகழ்வு புதன்கிழமை (24) நடைபெற்றது.

இந்த மாத ஆரம்பத்தில் பணியின்போது உயிரிழந்த, 43 வயதான அவசரகால பணிப் பிரிவு (ETF) உறுப்பினர் Const. Marc Pinizzotto-வின் அஞ்சலி நிகழ்வு புதன்கிழமை நடைபெற்றது.

Toronto Congress மையத்தில் நடைபெற்ற அஞ்சலி நிகழ்ச்சியில், ஆயிரக் கணக்கான காவல்துறை அதிகாரிகள், அவசர கால சேவைப் பணியாளர்கள், பிரமுகர்கள், குடும்ப உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்வில் கலந்துகொண்ட முக்கிய பிரமுகர்களில் Ontario மாகாண முதல்வர் Doug Ford, கனடாவிற்கான அமெரிக்கத் தூதர் Pete Hoekstra, Ontario மாகாண ஆளுநர் Edith Dumont, Toronto நகர முதல்வர் Olivia Chow ஆகியோர் அடங்குவர்.

இறுதி அஞ்சலி நிகழ்வில் Toronto தலைமை அதிகாரி Myron Demkiw, பலியான காவல்துறை அதிகாரியின் பிள்ளைகள், தாயார், இரண்டு சகோதரர்கள் உட்பட பலரும் உரையாற்றினர்.

முன்னதாக Toronto நகரின் வீதிகள் வழியாக அவரது பூதவுடல் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டபோது, அந்த பாதையின் இருபுறமும் சீருடை அணிந்த காவலர்கள் அணிவகுத்து நின்று மரியாதை செலுத்தினர்.

Toronto காவல்துறையில் 18 ஆண்டுகள் பணியாற்றிய அனுபவம் வாய்ந்த Const. Marc Pinizzotto, அமெரிக்கத் தூதரகத்தில் நடந்த துப்பாக்கிச் சூடு உட்பட, துப்பாக்கி சூட்டுச் சம்பவங்கள் குறித்த விசாரணையின் ஒரு பகுதியாக  தேடுதல் நடவடிக்கையை முன்னெடுத்தபோது, ​​June 11 அன்று North York நகரில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

Toronto அவசரகால பணிப் பிரிவின் 64 ஆண்டுகால வரலாற்றில், அதன் உறுப்பினர் ஒருவர் பணியின்போது உயிரிழந்தது இதுவே முதல் முறையாகும்.

இதில் சந்தேக நபராக அடையாளம் காணப்பட்ட 19 வயதான Nicholas Bennett, பதில் துப்பாக்கி பிரயோகத்தில் சுடப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

அவருக்கு எதிராக முதல்தர  கொலைக் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Related posts

Pharmacare சட்டமூலம் இந்த ஆண்டு நிறைவேற்றப்பட வேண்டும்: Jagmeet Singh

Lankathas Pathmanathan

Ottawa சூறாவளியினால் 125 வீடுகள் சேதம்

Lankathas Pathmanathan

மக்கள் கட்சியின் தலைவர் கைது

Gaya Raja

Leave a Comment