September 30, 2026
தேசியம்
செய்திகள்

சீனாவுடனான கனடாவின் உறவு ஒரு திருப்புமுனையான காலகட்டத்தில் உள்ளது: Mark Carney

சீனாவுடனான கனடாவின் உறவு ஒரு திருப்புமுனையான காலகட்டத்தில் உள்ளதாக கனடிய பிரதமர் Mark Carney கூறினார்.

கனடிய பிரதமர் ஒருவர் சீன ஜனாதிபதியை எட்டு ஆண்டுகளின் பின்னர் சந்தித்தார்.

கனடிய பிரதமர் Mark Carney, சீன ஜனாதிபதி Xi Jinping ஆகியோர் வெள்ளிக்கிழமை (31) சந்தித்தனர்.

கனடிய குடும்பங்களுக்கும், வணிகங்களுக்கும், தொழிலாளர்களுக்கும் வாய்ப்புகளை உருவாக்கும் ஒரு திருப்புமுனையான காலத்தில் இந்த சந்திப்பு நிகழ்ந்ததாக கனடிய பிரதமர் தெரிவித்தார்

தென் கொரியாவில் இந்த வாரம் நடைபெறும் ஆசிய-Pacific பொருளாதார ஒத்துழைப்பு மன்ற உச்சி மாநாட்டில் கலந்து கொள்ளும் இரு நாட்டின் உயர்மட்ட தலைவர்களும் சந்தித்தனர்.

சீன ஜனாதிபதியுடனான தனது சந்திப்பு “நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்டது” என 39 நிமிடங்கள் மட்டுமே நீடித்த சந்திப்பின் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய Mark Carney கூறினார்.

இந்த சந்திப்பு குறித்து மகிழ்ச்சி தெரிவித்த பிரதமர், அரசு முறைப் பயணத்திற்கான சீன ஜனாதிபதியின்  அழைப்பை ஏற்றுக் கொண்டதாகவும் கூறினார்.

இந்த பயணம் பரஸ்பரம் இரு தரப்பும் ஒப்புக்கொள்ளும் நேரத்தில் நடைபெறும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

நிலுவையில் உள்ள வர்த்தக பிரச்சினைகளைத் தீர்க்க விரைவாகச் செயல்படுத்துமாறு தங்கள் அதிகாரிகளுக்கு இரு தலைவர்களும்  அறிவுறுத்தினர் என இந்த சந்திப்பு குறித்து வெளியான கனடிய பிரதமர் அலுவலகத்தின் செய்தி குறிப்பு தெரிவிக்கிறது.

வர்த்தக பேச்சுவார்த்தைகளில் அமெரிக்கா கனடாவை ஓரங்கட்டி உள்ள நிலையில் இந்த சந்திப்பு நடைபெற்றது.

முன்னாள் பிரதமர் Justin Trudeau பதவிக் காலத்தில் வெளிநாட்டு தலையீடுகள் குறித்த குற்றசாட்டுகளின் பின்னர் பின்னடைவை சந்தித்த கனடாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான இராஜதந்திர உறவின் குறிப்பிடத்தக்க மாற்றமாக இந்த சந்திப்பு அமைகிறது.

கனடாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான உறவு 2018-ஆம் ஆண்டு மோசமடைந்தது.

வங்கி மோசடி குற்றச்சாட்டுகளுக்காக அமெரிக்க அரசின் கோரிக்கைக்கு அமைவாக Huawei நிர்வாகி  Meng Wanzhou -வை கனடா கைது செய்த பின்னர் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டது.

சில நாட்களுக்குப் பின்னர், உளவு பார்த்த குற்றச்சாட்டில் கனடாவைச் சேர்ந்த Michael Kovrig, Michael Spavor சீனாவில் கைது செய்யப்பட்டனர்.

Meng Wanzhou வீட்டுக் காவலில் இருந்து விடுவிக்கப்பட்ட பின்னர், 1,000 நாட்களுக்கும் மேலாக சீன சிறையில் அடைக்கப்பட்ட கனடியர்கள் இருவரும் விடுவிக்கப்பட்டனர்.

ஆனாலும் பிரதமராக பதவியேற்றத்திலிருந்து சீனாவுடனான உறவை மேம்படுத்துவதற்கான முயற்சிகளை Mark Carney முன்னெடுத்துள்ளார்.

கடந்த மாதம், ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபைக் கூட்டத்தின் போது, சீனப் பிரதமர் Li Qiang-கை கனடிய பிரதமர் சந்தித்தார்.

வெளியுறவு அமைச்சர் அனிதா ஆனந்த் இந்த மாத ஆரம்பத்தில் சீனாவில் அதிகாரிகளை சந்தித்திருந்தார்.

சீனா, உலகின் இரண்டாவது பெரிய பொருளாதாரத்தை கொண்டுள்ள நாடும், கனடாவின் இரண்டாவது பெரிய வர்த்தக பங்குதாரரும் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

Ontario தேர்தல் வரலாற்றில் இம்முறை மிகக் குறைந்த பேர் வாக்காளித்தனர்

Lankathas Pathmanathan

2026 குளிர்கால Olympic: கனடாவின் பதின்மூன்றாவது பதக்கம்

Lankathas Pathmanathan

Torontoவில் திட்டமிடப்பட்ட பயங்கரவாத தாக்குதல் முறியடிப்பு?

Lankathas Pathmanathan

Leave a Comment