தேசியம்
செய்திகள்

தொற்றின் பரவல் காரணமாக  மீண்டும்  மூட ஆரம்பிக்கும் பாடசாலைகள்!

நேரடி கல்விக்கு மீண்டும் பாடசாலைகள் திறந்த சில நாட்களின் பின்னர், COVID தொற்றின் பரவல் காரணமாக  கனடா முழுவதும் உள்ள பாடசாலைகள் பல மூட வேண்டிய நிலை தோன்றியுள்ளது.

Ontario பாடசாலைகளில் திங்கள் வரை 189 தொற்றுக்கள் பதிவாகியுள்ளன.
Ontarioவில் ஏற்கனவே ஒரு பாடசாலை தொற்றின் காரணமாக மூடப்பட்டுள்ளது

தொற்றின் பரவல் காரணமாக  Charlottetownனில்  உள்ள பாடசாலைகள்  தற்காலிகமாக மூடப்படும் என Prince Edward தீவின் தலைமை சுகாதார அதிகாரி ஞாயிற்றுக்கிழமை அறிவித்தார்.

Montreal மற்றும் Lavalலில் உள்ள சில பாடசாலைகளில் தொற்றுகளைக் கட்டுப்படுத்த Quebec மாகாணம் விரைவான COVID சோதனைகளை அறிமுகப்படுத்தியுள்ளது.

New Brunswickகில், 11 பாடசாலைகளில் தொற்றுக்களை உறுதிப்படுத்தியுள்ளதாக மாகாண அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

Related posts

வெள்ள அனர்த்த மீள் கட்டுமான பணிக்கு உதவ உடனடி நடவடிக்கை எடுக்குமாறு கனடிய அரசாங்கத்திடம் CTC வலியுறுத்தல்

Lankathas Pathmanathan

Ontarioவில் நாளாந்தம் 1.2 இலட்சம் வரை புதிய COVID தொற்றுகள் கண்டறியப்படலாம்!

அமைச்சரவையில் இருந்து Steven Guilbeault விலகல்!

Lankathas Pathmanathan

Leave a Comment