தேசியம்
செய்திகள்

வாகன திருட்டு குற்றச்சாட்டில் தமிழர் உட்பட 8 பேர் கைது!

Toronto பெரும்பாகம் முழுவதும் நிகழ்ந்த வாகன திருட்டுகளில் தமிழர் உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டு  குற்றச் சாட்டுகள் பதிவானது.

January 21, 22 ஆம் திகதிகளில் நடந்த திருட்டு சம்பவங்களுக்குப் பின்னர் இந்த கைதுகள் மேற்கொள்ளப்பட்டதாக புலனாய்வாளர்கள் கூறுகின்றனர்.

Mississauga, Toronto, Markham, Georgina ஆகிய நகரங்களில் இருந்து சந்தேக நபர்களை கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

கைதான தமிழர் 37 வயதான தேவராஜா துஷியந்தன் என அடையாளம் காணப்பட்டார்.

தவிரவும் மேலும் 7 பேர் கைது செய்யப்பட்டதை காவல்துறையினர் உறுதிப்படுத்தினர்.

கைதானவர்களின் விவரங்கள் York பிராந்திய காவல்துறையினரால் வெளியிடப்பட்டது.

Georgina நகரை சேர்ந்த 37 வயதான Thevarajah THUSCHIANTHAN,
Mississauga நகரை சேர்ந்த 41 வயதான Mohammad SIDDIQUI,
Markham நகரை சேர்ந்த 40 வயதான Muhammad FAYAZ,
Toronto நகரை சேர்ந்த 40 வயதான Faramroze HAVEWALLA,
Mississauga நகரை சேர்ந்த 27 வயதான Asad MAYO,
Mississauga நகரை சேர்ந்த 22 வயதான Amin HADJ-KADDOUR,
Mississauga நகரைசேர்ந்த 28 வயதான Kurushan REANCY,
Mississauga நகரை சேர்ந்த 29 வயதான Brandon BUNBURY.

இவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் எதுவும் நீதிமன்றில் நிரூபிக்கப்படவில்லை.

Related posts

நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து இந்த வாரம் Chrystia Freeland விலகல்

Lankathas Pathmanathan

முதல் முறையாக World Series தொடரின் ஏழாவது ஆட்டத்தில் Blue Jays!

Lankathas Pathmanathan

Influenza A தொடர்பான 3 குழந்தை மரணங்கள் கிழக்கு Ontario-வில் பதிவு

Lankathas Pathmanathan

Leave a Comment