தேசியம்
செய்திகள்

மீண்டும் கூடும் Ontario மாகாண சட்டமன்றம்

Ontario மாகாண சட்டமன்றம் திங்கட்கிழமை மீண்டும் கூடுகிறது.

14 வார இடைவெளிக்குப் பின்னர் Ontario மாகாண சபை அமர்வுகள் மீண்டும் ஆரம்பிக்கின்றன.

இம்முறை சபை அமர்வு எட்டு வாரங்கள் நீடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

2026-ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் வியாழக்கிழமை (26) தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில் முதல் வார அமர்வுகள் பரபரப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மாகாண நிதி அமைச்சர்Peter Bethlenfalvy வியாழனன்று Doug Ford அரசின் வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பிப்பார்.

இந்த அமர்வின் போது தகவல் அறியும் உரிமைச் சட்டங்களிலும் – freedom-of-information (FOI) – Doug Ford அரசாங்கம் மாற்றங்களைச் செய்ய உத்தேசித்துள்ளது.

பாடசாலை வாரிய அறங்காவலர்களுக்கான தனது எதிர்காலத் திட்டங்கள் குறித்து இந்த அமர்வின் போது மேலும் தகவல்களை வழங்கவும் Doug Ford அரசாங்கம் உறுதியளித்துள்ளது.

Related posts

400 நெடுஞ்சாலை வாகன விபத்தில் ஒருவர் மரணம்

Lankathas Pathmanathan

மோசடிக் குற்றச்சாட்டுக்களை எதிர்கொள்ளும் SNC நிறுவனமும் அதன் முன்னாள் நிர்வாக உத்தியோகத்தர்களும்!

Gaya Raja

Scarborough உயர்நிலைப் பாடசாலை துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 14 வயது சிறுவன் மீது குற்றச்சாட்டு

Lankathas Pathmanathan

Leave a Comment