February 16, 2025
தேசியம்
செய்திகள்

கனடிய மத்திய வங்கி $522 மில்லியன் இழந்தது

இந்த வருடத்தின் மூன்றாவது காலாண்டில் கனடிய மத்திய வங்கி 522 மில்லியன் டொலர்கள் இழந்துள்ளது.

இது கனடிய மத்திய வங்கியின் 87 ஆண்டுகால வரலாற்றில் முதல் இழப்பைக் குறிக்கிறது.

அதன் சொத்துக்கள் மீதான வட்டி வருமானம் வங்கியில் வைப்பு தொகைக்கான வட்டி கட்டணங்களுடன் வேகத்தைத் தக்கவைக்கவில்லை என மத்திய வங்கி ஒரு அறிக்கையில் தெரிவித்தது.

கடந்த வாரம் நாடாளுமன்ற நிதிக் குழுவின் முன் பேசிய மத்திய வங்கியின் ஆளுநர்,  எதிர்பார்க்கப்படும் இந்த இழப்புகளை குறிப்பிட்டிருந்தார்.

பணவியல் கொள்கையை முன்னெடுக்கும் மத்திய வங்கியின் திறனை இந்த இழப்புகள் பாதிக்காது என அவர் கூறினார்.

Related posts

கனடாவுக்கான பயணத்தை நிறைவு செய்த இளவரசர் Charles

Lankathas Pathmanathan

பிரதமரும் குடும்பத்தினரும் B.C.யில் விடுமுறை!

Lankathas Pathmanathan

Ontarioவில் மீண்டும் ஒரு Omicron திரிபு

Lankathas Pathmanathan

Leave a Comment