தேசியம்
செய்திகள்

இஸ்ரேலுக்கான விமான சேவைகளை ஆரம்பித்த Air Canada

இஸ்ரேலுக்கான விமான சேவைகளை Air Canada மீண்டும் ஆரம்பித்துள்ளது.

இஸ்ரேல்-ஹமாஸ் யுத்தம் காரணமாக ஆறு மாத இடைவெளிக்குப் பின்னர் Air Canada விமான சேவைகள் மீண்டும் ஆரம்பமாகின.

Toronto – Tel Aviv இடையிலான விமான சேவைகள் April 9 ஆம் திகதி மீண்டும் ஆரம்பித்தது.

Montreal – Tel Aviv  இடையிலான வாரத்தில் ஒரு முறை விமான சேவை May மாதம் மீண்டும் ஆரம்பிக்கின்றன.

இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையே யுத்தம் ஆரம்பித்ததை தொடர்ந்து, பிற சர்வதேச விமான நிறுவனங்கள் போலவே Air Canada Ben Gurion சர்வதேச விமான நிலையத்திற்கான சேவையை October 8 ஆம் திகதி  நிறுத்தியது.

விமான சேவையை மீண்டும் ஆரம்பிக்கும் வகையில், விரிவான பாதுகாப்பு பகுப்பாய்வு மேற்கொண்டுள்ளதாக விமான நிறுவனம் கூறியது.

அரசாங்க அதிகாரிகள், விமானக் குழுவினரை பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிற்சங்கங்கள்,பாதுகாப்பு நிபுணர்களுடன் ஆலோசனைகள் உட்பட விரிவான பாதுகாப்பு பகுப்பாய்வை Air Canada மேற்கொண்டது.

பாதுகாப்புச் சூழ்நிலை காரணமாக இஸ்ரேலுக்கு அத்தியாவசியமற்ற பயணத்தை தவிர்க்குமாறு கனடியர்களுக்கு மத்திய அரசாங்கம் அறிவுறுத்துகிறது.

Related posts

தமிழ் சமூக மைய கட்டுமானப் பணிகள் அடுத்த ஆண்டு ஆரம்பம்

Lankathas Pathmanathan

முதலாவது Moderna தடுப்பூசி ஏற்றுமதி கனடாவை வந்தடைந்தது

Lankathas Pathmanathan

Conservative கட்சிக் குழு ஒற்றுமையாக உள்ளது?

Lankathas Pathmanathan

Leave a Comment