தேசியம்
செய்திகள்

NDP தலைவர் பதவி விலகல்!

புதிய ஜனநாயக கட்சி (NDP) தலைவர் பதவியில் இருந்து Jagmeet Singh விலகியுள்ளார்.

திங்கட்கிழமை (28) நடைபெற்ற பொதுத் தேர்தலில் தனது தொகுதியில் Jagmeet Singh தோல்வியடைந்தார்.

இந்த நிலையில் கட்சி தலைவர் பதவியில் இருந்து விலகும் முடிவை அவர் அறிவித்தார்.

இடைக்காலத் தலைவர் நியமிக்கப்பட்டவுடன் கட்சித் தலைவர் பதவியில் இருந்து விலகுவேன் என Jagmeet Singh தனது உரையில் கூறினார்.

புதிதாக அமைக்கப்பட்ட  Burnaby மத்திய தொகுதியில் இவருக்கு எதிராக போட்டியிட்ட Liberal வேட்பாளர் Wade Chang வெற்றி பெற்றார்.

Jagmeet Singh-கின் முன்னாள் Burnaby தெற்கு தொகுதி 2022 மீள்-விநியோகத்தைத் தொடர்ந்து அகற்றப்பட்டது.

தேர்தல் முடிவுகள் குறித்து தான் ஏமாற்றமடைந்துள்ளதாக கூறிய Jagmeet Singh, தனது கட்சி குறித்து நம்பிக்கை வெளிப்படுத்தினார்

இதுவரை, அறிவிக்கப்பட்ட  முடிவுகளின் அடிப்படையில்  NDP எட்டு இடங்களில் தேர்ந்தெடுக்கப்பட்டது அல்லது முன்னணியில் உள்ளது.

இது அவர்களின் உத்தியோகபூர்வ கட்சி நிலையைத் தக்க வைத்துக் கொள்ள தேவையான இடங்களின் எண்ணிக்கையை விட குறைவானது என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

காட்டுத்தீ காரணமாக மூன்று மாகாணங்களில் வெளியேற்ற உத்தரவு

Lankathas Pathmanathan

கனடாவின் புதிய தலைமை செவிலியர் அதிகாரி நியமனம்

Lankathas Pathmanathan

மத்திய அரசின் குறைந்தபட்ச ஊதியம் அதிகரிக்கிறது

Lankathas Pathmanathan

Leave a Comment