தேசியம்
செய்திகள்

மீண்டும் ஆட்சி அமைக்கும் Liberal!

கனடிய பொதுத் தேர்தல் Liberal கட்சி மீண்டும் வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளது.

திங்கட்கிழமை (28) நடைபெற்ற தேர்தலில் அதிக ஆசனங்களை வெற்றி பெற்று Liberal கட்சி சிறுபான்மை ஆட்சி அமைத்துள்ளது.

நாடளாவிய ரீதியில் Liberal கட்சி 167 ஆசனங்கள், Conservative 145 ஆசனங்கள்  , Bloc Quebecois 23 ஆசனங்கள், NDP 7 ஆசனங்கள்,  பசுமைக் கட்சி 1 ஆசனம் என ஆசனங்களை வெற்றி பெற்றுள்ளது அல்லது முன்னிலையில் உள்ளது.

இந்த நிலையில் Conservative, NDP கட்சித் தலைவர்கள் தேர்தல் தோல்வியை ஒப்புக் கொண்டுள்ளனர்.

Liberal தலைவர் Mark Carney முதல் தடவையாக தேர்தலில் போட்டியிட்டு நாடாளுமன்ற உறுப்பினராக வெற்றி பெற்றுள்ளார்.

தனது தொகுதியில் தோல்வி அடைந்த புதிய ஜனநாயக கட்சி (NDP) தலைவர் Jagmeet Singh தலைமை பதவியில் இருந்து விலகியுள்ளார்.

பசுமைக் கட்சியின் இணைத் தலைவர் Elizabeth May மீண்டும் நாடாளுமன்றத்திற்கு  தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
ஆனாலும் பசுமைக் கட்சியின் மற்றைய இணைத் தலைவர் Jonathan Pedneaul இந்தத் தேர்தலில் தோல்வி அடைந்தார்.

 

Related posts

Freedom Convoy போராட்ட ஏற்பாட்டாளர்களுக்கு எதிரான குற்றவியல் விசாரணை முடிவு

Lankathas Pathmanathan

பயங்கரவாதத்தை ஆதரிக்கும் வெளிநாட்டு அரசுகளின் பட்டியலில் இருந்து சிரியாவை கனடா நீக்கியது!

Lankathas Pathmanathan

கனடாவுக்கு வருகை தரும் அமெரிக்கர்களின் எண்ணிக்கை குறைகிறது?

Lankathas Pathmanathan

Leave a Comment