தேசியம்
செய்திகள்

கனடா அமெரிக்காவுடன் இணைய வேண்டும் – மீண்டும் குரல் எழுப்பும் அமெரிக்க ஜனாதிபதி

கனடா அமெரிக்காவுடன் இணைய வேண்டும் என அமெரிக்க ஜனாதிபதி மீண்டும் தெரிவித்தார்.

கனடிய பொதுத் தேர்தல் வாக்களிப்பு தினமன்று இந்தக் கருத்தை Donald Trump தெரிவித்தார்.

தேர்தலில் ஒரு வேட்பாளரை ஆதரிக்காமல், கனடா அமெரிக்காவின் 51-வது மாநிலமாக மாறுவதற்கு அமெரிக்க ஜனாதிபதி கனடிய தேர்தல் தினமான திங்கட்கிழமை (28) ஒப்புதல் அளித்தார்.

இதன் மூலம் கனடா சிறந்த பலன்களை பெற முடியும் என அவர் கூறினார்.

இதற்கு பதிலளிக்கும் வகையில் கனடா எப்போதும் இறையாண்மை கொண்ட சுதந்திரமான நாடாக இருக்கும் என Conservative தலைவர் Pierre Poilievre தெரிவித்தார்.

நாங்கள் ஒருபோதும் அமெரிக்காவின் 51-வது மாநிலமாக இருக்க மாட்டோம் எனவும் அவர் கூறினார்.

கனடிய தேர்தலில் அமெரிக்க ஜனாதிபதி பெரும் ஆதிக்கம் செலுத்தி வருகிறார்.

இந்தத் தேர்தல் Liberal – Conservative கட்சிகள் இடையே கடும் போட்டியாக அமைந்துள்ளது.

இந்தத் தேர்தலின் முக்கியத்துவத்தின் ஒரு அறிகுறியாக, முன்னெப்போதும் இல்லாத எண்ணிக்கையில் 7.3 மில்லியன் கனடியர்கள் முன்கூட்டிய வாக்களிப்பில் வாக்களித்தனர்.

தேர்தல் தினமான திங்களன்று, Newfoundland-தில் உள்ளூர் நேரப்படி காலை 8:30 மணிக்கு முதல் வாக்கெடுப்பு ஆரம்பித்தது.

இறுதி வாக்கெடுப்பு 15 மணி நேரம் கழித்து British Columbia-வில் Pacific நேரப்படி 7 மணிக்கு முடிவுக்கு வருகிறது.

Related posts

சட்ட நடவடிக்கை முன்னெடுக்கும் Han Dong

Lankathas Pathmanathan

நாடளாவிய ரீதியில் திங்கட்கிழமை மாத்திரம் 2,034 தொற்றுக்கள் பதிவு!

Gaya Raja

பொது சேவை ஊழியர்கள் குறைப்புகள் குறைந்த அளவில் இருக்கும்: Steven MacKinnon

Lankathas Pathmanathan

Leave a Comment