தேசியம்
செய்திகள்

பொதுத் தேர்தலில் மூன்று தமிழர்கள் வெற்றி பெறுவார்கள்?

நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் போட்டியிடும் ஆறு தமிழ் வேட்பாளர்களில் பேர்  மூவர் வெற்றி பெறுவார்கள் என இறுதியாக வெளியான கருத்து கணிப்பு தெரிவிக்கிறது.
பொதுத் தேர்தல் வாக்குப்பதிவு திங்கட்கிழமை (28) நடைபெறுகிறது.
இந்தத் தேர்தலில் Liberal கட்சியின் சார்பில் மூன்று, Conservative கட்சியின் சார்பில் இரண்டு, பசுமை கட்சியின் சார்பில் ஒன்று என மொத்தம் ஆறு தமிழர்கள் வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்.
Liberal கட்சியின் சார்பில் Oakville கிழக்கு தொகுதியில் அனிதா ஆனந்த், Scarborough-Guildwood-Rouge Park தொகுதியில் ஹரி ஆனந்தசங்கரி, Pickering–Brooklin தொகுதியில் ஜுனிதா நாதன் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
Conservative கட்சியின் சார்பில் Markham-Stouffville தொகுதியில் நிரான் ஜெயநேசன், Markham -Thornhill தொகுதியில் லியோனல் லோகநாதன் ஆகியோர் இந்தத் தேர்தலை எதிர்கொள்கின்றனர்.
பசுமை கட்சியின் Etobicoke வடக்கு தொகுதியில் சருன் பாலரஞ்சன் என்ற தமிழர் வேட்பாளராக உள்ளார்.
இவர்களில் மூன்று பேர் வெற்றி பெறும் சாத்தியக்கூறு உள்ளது என இறுதியாக ஞாயிற்றுக்கிழமை (27) வெளியான கருத்து கணிப்பு தெரிவிக்கிறது.  இவர்கள் மூவரும் Liberal கட்சி வேட்பாளராவார்கள்.
Oakville கிழக்கு தொகுதியில் Liberal கட்சி வேட்பாளர் அனிதா ஆனந்துக்கான ஆதரவு 47 சதவீதம் உள்ளது. இவரது பிரதான போட்டியாளராக உள்ள Conservative கட்சி வேட்பாளர் Ron Chhinzer  44 சதவீத மக்கள் ஆதரவை கொண்டுள்ளதாக இறுதியாக வெளியான கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன. இந்தத் தொகுதியில் அனிதா ஆனந்த் வெற்றிபெறுவதற்கான சாத்தியக்கூறு 66 சதவீதம் உள்ளது.
Scarborough-Guildwood-Rouge Park தொகுதியில் Liberal கட்சி வேட்பாளர் ஹரி ஆனந்தசங்கரிக்கான ஆதரவு 66 சதவீதம் உள்ளது. இவரது பிரதான போட்டியாளராக உள்ள Conservative கட்சி வேட்பாளர் Suchita Jalan 27 சதவீத மக்கள் ஆதரவை கொண்டுள்ளதாக இறுதியாக வெளியான கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன. இந்தத் தொகுதியில் ஹரி ஆனந்தசங்கரி வெற்றி பெறுவதற்கான சாத்தியக்கூறு 99 சதவீதம் உள்ளது.
Pickering–Brooklin தொகுதியில் Liberal கட்சி வேட்பாளர் ஜுனிதா நாதனுக்கான ஆதரவு 55 சதவீதம் உள்ளது. இவரது பிரதான போட்டியாளராக உள்ள Conservative கட்சி வேட்பாளர் Alicia Vianga 37 சதவீத மக்கள் ஆதரவை கொண்டுள்ளதாக இறுதியாக வெளியான கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன. இந்தத் தொகுதியில் ஜுனிதா நாதன் வெற்றி பெறுவதற்கான சாத்தியக்கூறு 99 சதவீதம் உள்ளது.
Markham-Stouffville தொகுதியில் Conservative கட்சி வேட்பாளர் நிரான் ஜெயநேசனுக்கான ஆதரவு 39 சதவீதம் உள்ளது. இவரது பிரதான போட்டியாளராக உள்ள Liberal கட்சி வேட்பாளர் Helena Jaczek 52 சதவீத மக்கள் ஆதரவை கொண்டுள்ளதாக இறுதியாக வெளியான கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன. இந்தத் தொகுதியில் Helena Jaczek வெற்றி பெறுவதற்கான சாத்தியக்கூறு 97 சதவீதம் உள்ளது.
Markham -Thornhill தொகுதியில் Conservative கட்சி வேட்பாளர் லியோனல் லோகநாதனுக்கான ஆதரவு 33 சதவீதம் உள்ளது. இவரது பிரதான போட்டியாளராக உள்ள Liberal கட்சி வேட்பாளர் Tim Hodgson 61 சதவீத மக்கள் ஆதரவை கொண்டுள்ளதாக இறுதியாக வெளியான கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன. இந்தத் தொகுதியில் Tim Hodgson வெற்றி பெறுவதற்கான சாத்தியக்கூறு 99 சதவீதம் உள்ளது.
Etobicoke வடக்கு தொகுதியில் பசுமை கட்சியின் வேட்பாளர் சருன் பாலரஞ்சன் நான்காவது இடத்தைப் பெறுவார் என கருத்து கணிப்பு தெரிவிக்கிறது. இந்தத் தொகுதியை Liberal கட்சி வேட்பாளர் John Zerucelli வெற்றி பெறுவதற்கான சாத்தியக்கூறு 99 சதவீதம் உள்ளது.

Related posts

Justin Trudeau பதவி விலக வேண்டிய நேரம் இது: முன்னாள் Liberal அமைச்சர்

Lankathas Pathmanathan

இஸ்ரேல் சென்றடைந்தார் கனடிய வெளியுறவு அமைச்சர்

Lankathas Pathmanathan

கனடிய அரசின் அவசர நடவடிக்கைகளில் March மாதம் 27ஆந் திகதி புதிதாக அறிவிக்கப்பட்டவை (English version below)

thesiyam

Leave a Comment