தேசியம்
கனேடிய தேர்தல் 2021 செய்திகள்

வார இறுதியில் முன்கூட்டிய வாக்குப்பதிவு!

பொதுத் தேர்தலுக்கான முன்கூட்டிய வாக்குப்பதிவு இந்த வார இறுதியில் நடைபெற உள்ளது.

வெள்ளிக்கிழமை ஆரம்பமாகவுள்ள முன்கூட்டிய வாக்குப்பதிவு நான்கு நாட்களுக்கு நடைபெற ஏற்பாடாகியுள்ளது.

நாளாந்தம் காலை 9 மணிக்கு ஆரம்பமாகும் வாக்குப்பதிவு இரவு 9 மணி வரை தொடரும் என கனேடிய தேர்தல் திணைக்களம் அறிவித்துள்ளது.

அதேவேளை 500க்கும் அதிகமான கனேடிய தேர்தல் திணைக்கள அலுவலகங்களில் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை மாலை 6 மணி வரை வாக்களிக்கும் ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அதேபோல் அஞ்சல் மூலம் வாக்களிப்பவர்கள் செவ்வாய்க்கிழமை மாலை 6 மணி வரை வாக்களிக்க முடியும் என தேர்தல் திணைக்களம் அறிவித்துள்ளது.

Related posts

Bill 124 சட்டத்தை இரத்து செய்த Ontario அரசாங்கம்

Lankathas Pathmanathan

கனடிய அரசின் அவசர நடவடிக்கைகளில் May மாதம் 25ஆந் திகதி புதிதாக அறிவிக்கப்பட்டவை | (English version below)

thesiyam

நாடு கடத்தல் உத்தரவு பிறப்பிக்கப்பட்ட சீன தூதர் கனடாவில் இருந்து வெளியேற்றம்

Leave a Comment