November 15, 2025
தேசியம்
செய்திகள்

இஸ்லாமிய வெறுப்பு நடவடிக்கையை எதிர்த்து போராடுவதற்காக நியமிக்கப்பட்ட பிரதிநிதிக்கு ஆதாரவு தெரிவிக்கும் பிரதமர்

இஸ்லாமிய வெறுப்பு நடவடிக்கையை எதிர்த்து போராடுவதற்காக நியமிக்கப்பட்ட கனடாவின் முதல் சிறப்புப் பிரதிநிதிக்கு ஆதாரவான தனது நிலைப்பாட்டை பிரதமர் Justin Trudeau மீண்டும் வெளியிட்டார்.

இஸ்லாமிய வெறுப்பு நடவடிக்கையை எதிர்த்து போராடுவதற்காக கனடாவின் முதல் சிறப்பு பிரதிநிதியாக கடந்த வாரம் Amira Elghawaby நியமிக்கப்பட்டார்.

அவரது நியமனம் அறிவிக்கப்பட்டதிலிருந்து, Elghawaby 2019 இல் எழுதிய ஒரு கட்டுரைக்காக விமர்சனங்களை எதிர்கொள்கிறார்.

Quebec அரசாங்கத்தின் அதிகாரிகள் அவரை பதவி விலக தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

மத்திய அமைச்சர்கள் கடந்த நாட்களாக Quebec மாகாணத்திடமிருந்து இந்த விடையத்தில் கேள்விகளை எதிர்கொள்கின்றனர்.

ஆனாலும் Elghawabyவை 100 சதவீதம் ஆதரிப்பதாக செவ்வாய்க்கிழமை (31) தனது அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்து கொண்ட Trudeau கூறினார்.

Quebecகர்கள் இஸ்லாமிய வெறுப்புக்கு ஆளானவர்கள் என தான் நம்பவில்லை என ஒரு tweetடில் Elghawaby கடந்த வாரம் தெளிவுபடுத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

N.B. மாகாணத்தில் முதல் தடவையாக பெண் முதல்வர்!

Lankathas Pathmanathan

மாகாணங்களில் தொடர்ந்து அறிவிக்கப்படும் புதிய கட்டுப்பாடுகள்

Lankathas Pathmanathan

ரஷ்ய இராணுவ அதிகாரிகள் மீது மேலும் பொருளாதாரத் தடைகளை அறிவித்த கனடா

Lankathas Pathmanathan

Leave a Comment