February 13, 2025
தேசியம்
செய்திகள்

27 பிராந்தியங்கள் வீட்டில் தங்கியிருக்கும் உத்தரவில் இருந்து விலத்தல்

Ontario மாகாண அரசாங்கம் 27 பிராந்தியங்களை February 16ஆம் திகதி முதல் வீட்டில் தங்கியிருக்கும் உத்தரவில் இருந்து விலத்துகின்றது.

இதன் மூலம் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை முதல் இந்தப் பிராந்தியங்கள் மீளத் திறக்கப்படும் கட்டமைப்புக்குள் செல்கின்றன. இதன் மூலம் இந்தப் பிராந்தியங்களில் அத்தியாவசியமற்ற வணிகங்களை மீளத் திறப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது .

Toronto, Peel, York, North Bay Parry Sound ஆகிய பகுதிகள் இந்த மீளத் திறக்கப்படும் கட்டமைப்புக்குள் உள்ளடக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் பகுதிகளில் குறைந்தது February 22ஆம் திகதி வரை வீட்டிலேயே தங்குவதற்கான உத்தரவு அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

கனடாவின் புதிய ஆளுநர் நாயகம் 26ஆம் திகதி பதவி ஏற்கிறார்!

Gaya Raja

Mississauga விபத்தில் காயமடைந்த தமிழர் மரணம்

Lankathas Pathmanathan

தற்காலிக உடன்பாட்டை எட்டியது LCBO – வேலை நிறுத்தம் முடிவுக்கு வருகிறது?

Lankathas Pathmanathan

Leave a Comment