Conservative தலைவர் Pierre Poilievre போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படும் Alberta தொகுதியின் இடைத் தேர்தல் திகதி அறிவிக்கப்பட்டுள்ளது.
August மாதம், Alberta மாகாணத்தின் Battle River-Crowfoot தொகுதிக்கான இடைத் தேர்தல் நடைபெறவுள்ளது.
இந்த இடைத் தேர்தல் திகதியை பிரதமர் Mark Carney வெளியிட்டார்.
August 18-ஆம் திகதி இந்த இடைத் தேர்தல் நடைபெறும் என பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ளது.
இந்த இடைத் தேர்தலில் Conservative தலைவர் Pierre Poiievre போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
நாடாளுமன்றத்தில் ஒரு ஆசனத்தை வெற்றி பெறும் நம்பிக்கையுடன் இந்த இடைத் தேர்தலில் Pierre Poilievre போட்டியிடவுளார்.
April மாதம் நடைபெற்ற பொதுத் தேர்தலில் Conservative கட்சித் தலைவர் Pierre Poilievre தனது சொந்தத் தொகுதியில் தோல்வியடைந்தார்.
இந்த நிலையில் அவருக்கு நாடாளுமன்றத்தில் ஒரு ஆசனத்தை கண்டுபிடிக்கும் முயற்சியில் Battle River-Crowfoot தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் Damien Kurek தனது பதவியில் இருந்து இந்த மாத நடுப்பகுதியில் அதிகாரப்பூர்வமாக விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது.