தேசியம்
செய்திகள்

முதலாவது தொகுதி Johnson & Johnson தடுப்பூசிகள் கனடாவை வந்தடைந்தன!

முதலாவது தொகுதி Johnson & Johnson COVID தடுப்பூசிகள் புதன்கிழமை மாலை கனடாவை வந்தடைந்துள்ள தகவலை கொள்முதல் அமைச்சர் அனிதா ஆனந்த வெளியிட்டார்.

3 இலட்சம் Johnson & Johnson தடுப்பூசிகள் புதன்கிழமை கனடாவை வந்தடைந்தன. மொத்தம் 10 மில்லியன் Johnson & Johnson தடுப்பூசிகளை கனடா கொள்வனவு செய்துள்ளது. Johnson & Johnson தடுப்பூசிகள் கனடாவில் பாவனைக்கு அங்கீகரிக்கப்பட்டு விநியோகிக்கப்பட்ட நான்காவது COVID தடுப்பூசியாகும்.

இந்த விநியோகத்துடன் கனடா மொத்தம் 15 மில்லியனுக்கும் அதிகமான தடுப்பூசிகளை பெற்றுள்ளது. கனடியர்களில் 30 சதவீதத்திற்கும் அதிகமானவர்கள் இதுவரை தடுப்பூசியை பெற்றுள்ளதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

Related posts

COVID புதிய திரிபினால் 60% உயர்கிறது இறப்பு அபாயம்!

Gaya Raja

March இறுதிக்குள் முகமூடி கட்டுப்பாடுகளை நீக்கும் நிலையில் Ontario உள்ளது

Lankathas Pathmanathan

கனடிய செய்திகள் – October மாதம் 15 ஆம் திகதி வியாழக்கிழமை

Lankathas Pathmanathan

Leave a Comment

error: Alert: Content is protected !!