தேசியம்
செய்திகள்

British Colombiaவின் சில பகுதிகளில் மீண்டும் முக கவசங்கள் கட்டாயமாக்கப்பட்டுள்ளது!

British Colombiaவின் உட்புறத்தின் சில பகுதிகளுக்கு உட்புற பொது இடங்களில் மீண்டும் முக கவசங்கள் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

மாகாணத்தின் உட்புறத்தின் சில பகுதிகளில் மீண்டும் COVID தொற்றுகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் நிலையில் இந்த முடிவு புதன்கிழமை அறிவிக்கப்பட்டது.

மாகாண சுகாதார அதிகாரி வைத்தியர் Bonnie Henry, சுகாதார அமைச்சர் Adrian Dix மற்றும் உள்துறை சுகாதார ஆணையத்தின் தலைமை மருத்துவ சுகாதார அதிகாரி வைத்தியர் Sue Pollock ஆகியோர் இணைந்து இந்த அறிவிப்பை வெளியிட்டனர்.

British Colombia மாகாணம் அதன் மறுதொடக்கம் திட்டத்தின் 3 ஆவது கட்டத்தில் உள்ளது. மேலும் வணிகங்களின் விதிகள் உட்பட, அந்த நடவடிக்கையின் கீழ் இருக்கும் விதிகளையும் வலுப்படுத்துவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

British Columbiaவில் புதன்கிழமை 185 தொற்றுக்களும் மூன்று மரணங்களும் பதிவாகின.

Related posts

Ontarioவில் 4,000க்கு மேல் பதிவான தொற்றுகள்!

Lankathas Pathmanathan

கனடிய மத்திய வங்கி $522 மில்லியன் இழந்தது

Lankathas Pathmanathan

உக்ரைனுக்கு கவச வாகனங்களை வழங்குவதில் கனடா முன்னணியில் இருக்க முடியும்: பாதுகாப்பு அமைச்சர்

Lankathas Pathmanathan

Leave a Comment