தேசியம்
செய்திகள்

கனடாவுக்கு வரும் பயணிகளில் தனிமைப்படுத்தலை மறுத்தவர்களுக்கு அபராதம்!

கனடிய அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட விடுதிகளில் தனிமைப்படுத்தலை மறுத்ததற்காக கனடாவுக்கு வரும் பயணிகளுக்கு நூற்றுக்கணக்கான அபராதங்கள் விதிக்கப்பட்டுள்ளன.

கனடாவின் பொது சுகாதார நிறுவனம் புதன்கிழமை இந்த தகவலை வெளியிட்டது. தனிமைப்படுத்தப்பட்ட விடுதிகளில் தங்க மறுத்ததற்காக April மாதம் 19ஆம் திகதி வரை 404 அபராத சீட்டுகள்  பயணிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன. இவற்றில்  247 அபராத சீட்டுக்கள் Ontarioவிலும்,157 அபராத சீட்டுக்கள் British Columbiaவிலும் வழங்கப்பட்டுள்ளன.

Quebec மாகாணத்தில் இது போன்ற அபராத சீட்டுக்களை மாகாண வழக்குரைஞர்கள் வழங்குவதால் இது குறித்த பதிவுகள் எதுவும் தம்வசம் இல்லை என கனடாவின் பொது சுகாதார நிறுவனம் கூறுகிறது. அதேபோல் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட விடுதிகளுக்கு செல்ல மறுக்கும் பயணிகளுக்கு எதிராக  Albertaவில் எடுக்கப்பட்ட எந்தவொரு அமுலாக்க நடவடிக்கைகள் குறித்தும் தாம் அறியவில்லை எனவும் கனடாவின் பொது சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

Related posts

மத்திய அரசின் பொது சேவை ஊழியர்களுக்கு கட்டாயமாக்கப்படும் தடுப்பூசிகள்!

Gaya Raja

RCMP ஆணையர் பதவி விலகல்

Lankathas Pathmanathan

அடுத்த வாரம் Liberal அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கு முதல் வாய்ப்பு?

Lankathas Pathmanathan

Leave a Comment