Markham நகரசபையின் 7-ஆம் வட்டார இடைத் தேர்தல் வேட்புமனு திங்கட்கிழமை (30) முதல் ஏற்றுக் கொள்ளப்படுகிறது.
Markham நகரசபையின் 7-ஆம் வட்டாரத்தில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது.
Markham நகரசபை இந்த இடைத்தேர்தலை அறிவித்துள்ளது.
இந்த இடைத் தேர்தல் வாக்களிப்பு September 29-ஆம் திகதி நடைபெறவுள்ளது.
முன்கூட்டிய வாக்களிப்பு September 26, 27, 28-ஆம் திகதிகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
திங்கட்கிழமை (30) முதல் இந்த இடைத் தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்படுகிறது.
தகுதியுள்ளவர்கள் August 15, 2025 பிற்பகல் 2 மணி வரை வேட்பாளராக பதிவு செய்யலாம் என அறிவிக்கப்பட்டது.
Pickering–Brooklin நாடாளுமன்ற உறுப்பினராக ஜுனிதா நாதன் தேர்ந்தெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து வெற்றிடமாக உள்ள 7-ஆம் வட்டார நகரசபை உறுப்பினர் இடத்தை நிரப்ப இந்த இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது.
இந்த இடைத் தேர்தலை நடத்துவதற்கான செலவு $300,000 என மதிப்பிடப்படுகிறது.