LGBTQ உரிமைகளை ஆதரிக்கும் அறிக்கையில் கனடா கையொப்பமிட்டது.
LGBTQ உரிமைகளை ஆதரிக்கும் வகையில் கனடா, ஆஸ்திரேலியா, Brazil , பல ஐரோப்பிய நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் அறிக்கை ஒன்றை வெளியிட்டனர்.
Pride தினத்தை குறிக்கும் வகையில் சனிக்கிழமை (28) இந்த அறிக்கை வெளியானது.
Spain, Belgium, Colombia, Ireland உள்ளிட்ட நாடுகளும் ஆதரவளிக்கும் இந்த அறிக்கையில் அமெரிக்கா கையொப்பமிட்டவில்லை.
மனித உரிமை மீறல்களாகக் கருதப்படும் அனைத்து வகையான வன்முறை, குற்றமயமாக்கல், களங்கப்படுத்துதல் அல்லது பாகுபாடு ஆகியவற்றை நிராகரிப்பதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.