தேசியம்
செய்திகள்

COVID நெருக்கடி: எதிர்க்கட்சித் தலைவர்களை பிரதமர் இன்று சந்தித்தார்

கனடாவின் எதிர்க்கட்சித் தலைவர்களை பிரதமர் Justin Trudeau இன்று (வியாழன்) ஒன்றாக சந்தித்துள்ளார். தொற்றின் இன்றைய நிலை குறித்து கனடாவின் உயர்மட்ட பொது சுகாதார அதிகாரிகளிடமிருந்து விளக்கங்களை பெறும் வகையில் இன்றைய சந்திப்பை பிரதமர் நடத்தினார்.

இந்தச் சந்திப்பின் பின்னர் COVID நெருக்கடியின் நிலை குறித்து எதிர்க்கட்சித் தலைவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். நாளை கனடாவின் தலைமை பொது சுகாதார அதிகாரியினால் புதுப்பிக்கப்பட்ட modelling விபரங்கள் வெளியாகவுள்ள நிலையில் இன்றைய சந்திப்பு நடைபெற்றது.

இன்றைய சந்திப்பின் பின்னர், COVID விடயத்தில் கனடிய அரசாங்கத்தின் நகர்வுகளை எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்ப ஆரம்பித்துள்ளன. ஒரு நாடாக நாம் தொற்றுநோயின் ஆரம்பத்தில் இருந்ததை விட இன்று மோசமான நிலையில் இருக்கிறோம் என Conservative கட்சியின் தலைவர் Erin O’Toole இன்றைய சந்திப்பின் பின்னர் கூறினார். தொற்று நோயைக் கட்டுக்குள் கொண்டுவருவதற்கு மத்திய அரசு என்ன நடவடிக்கைகளை செய்ய முடியும் என்பது குறித்து விவாதிக்க அவசர பொது விவாதத்திற்கு அழைப்பு விடுப்பதாக பசுமைக் கட்சியின் தலைவி அன்னமி Annamie Paul கூறினார்.

Related posts

நாடாளுமன்ற உறுப்பினர் Jim Carr மரணம்

Lankathas Pathmanathan

கனேடிய விண்வெளி துறையின் முன்னாள் பொறியாளர் சீன நிறுவனத்தின் சார்பாக செயல்பட்டார்: RCMP குற்றம்

Lankathas Pathmanathan

NHL Playoff தொடரின் அடுத்த சுற்றுக்கு தெரிவான Edmonton Oilers

Lankathas Pathmanathan

Leave a Comment