November 13, 2025
தேசியம்
செய்திகள்

நாடாளுமன்ற உறுப்பினர் Jim Carr மரணம்

Liberal நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான Jim Carr காலமானார்

Winnipeg South Centre தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினரான அவர், தனது இல்லத்தில் காலமானார்.

71 வயதான அவரது மரணத்தை Winnipeg நாடாளுமன்ற உறுப்பினரான Kevin Lamoureux நாடாளுமன்றத்தில் திங்கட்கிழமை (12) அறிவித்தார்.

இந்த அறிவிப்பை தொடர்ந்து அவரது மறைவுக்கு நாடாளுமன்றத்தில் ஒரு கணம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

இதையடுத்து திங்கட்கிழமை சபை நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டன.

2015 இல் முதன் முறையாக நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட Carr , இம்முறை மூன்றாவது முறையாக தேர்தலில் வெற்றி பெற்றார்.

அவர் 2019ஆம் ஆண்டு முதல் சிறுநீரக செயலிழப்பு நோயினால் பாதிக்கப்பட்டு வந்தவராவார்.

Related posts

நாடளாவிய ரீதியில் புதன்கிழமை மொத்தம் 2,626 தொற்றுக்கள் பதிவு!

Gaya Raja

Scarboroughவில் வாகனம் மோதி பலியான ; தமிழ் சிறுவனின் இறுதிக் கிரிகைகள் வியாழக்கிழமை!

Gaya Raja

Ontarioவில் COVID காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 38 சதவீதம் அதிகரிப்பு

Lankathas Pathmanathan

Leave a Comment