Omicron மாறுபாடு குறித்து G7 நாடுகளின் சுகாதார அமைச்சர்கள் அவசர கூட்டம் ஒன்றை திங்கட்கிழமை நடத்தினர்.
இதில் கனடிய சுகாதார அமைச்சர் Jean-Yves Duclos பங்கேற்றார்.
இந்த கூட்டத்தில் Omicron மாறுபாட்டை உன்னிப்பாகக் கண்காணிக்கவும், அதைப் பற்றிய தகவல்களை பகிர்ந்து கொள்ளவும் சுகாதார அமைச்சர்கள் இணக்கம் தெரிவித்தனர்.
மீண்டும் அடுத்த மாதம் கூடி இந்த மாறுபாடு குறித்து உரையாடுவதற்கு அமைச்சர்கள் ஒப்புக் கொண்டனர்.