September 24, 2026
தேசியம்
செய்திகள்

Mississauga வரை TTC சுரங்க இரயில்?

TTC புகையிரத சேவையை Mississauga நகரம் வரை நீட்டிக்கும்  திட்டம் குறித்த அறிவித்தலை Mississauga நகர முதல்வர் வேட்பாளர் வெளியிட்டார்.

Mississauga நகர முதல்வர் தேர்தலில் போட்டியிடும் முன்னணி வேட்பாளர் Bonnie Crombie, தனது தேர்தல் பிரச்சார உறுதி மொழிகளில் ஒன்றாக இந்த அறிவித்தலை வியாழக்கிழமை (24) வெளியிட்டார்.

October 26 அன்று Mississauga உட்பட Ontario-வின் நகராட்சித் தேர்தல்கள் நடைபெறவுள்ள நிலையில் இந்த அறிவித்தல் வெளியாகியுள்ளது.

Toronto போக்குவரத்து சபையின் (TTC) பிரதான புகையிரத பாதையான இரண்டாவது பாதை சுரங்க இரயில் சேவையை (Line 2 Subway) Mississauga நகரின் மையப்பகுதி வரை நீட்டிப்பதற்கான போக்குவரத்துத் திட்டத்தை Bonnie Crombie வெளியிட்டுள்ளார்.

Mississauga Moves 2.0 என இந்த புதிய போக்குவரத்து திட்டம் பெயரிடப்பட்டுள்ளது.

தற்போது Toronto நகரின் Kipling சுரங்க நிலையத்துடன் முடிவடையும் Line 2 புகையிரத பாதையை மேற்கு நோக்கி நீட்டித்து, Sherway Gardens வழியாக Mississauga நகரின் மையப்பகுதி வரை கொண்டு செல்வதே இதன் முதன்மை நோக்கமாகும்.

தான் நகர முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்டால், முதல் ஆண்டிலேயே Ontario அரசு, Metrolinx, Toronto மாநகராட்சியுடன் இணைந்து இதற்கான வணிக வழித்தட ஆய்வுகளை ஆரம்பிக்க உள்ளதாக Bonnie Crombie உறுதியளித்துள்ளார்.

இந்த புகையிரத பாதையை முழுமையாக நிலத்தடியில் அமைக்காமல், Dundas Street வழித்தடத்தில் நிலத்திற்கு மேலாக அமைப்பது குறித்து ஆய்வு செய்யப்படும் எனவும் அவர் கூறினார்.

தவிரவும் தற்போது கட்டுமானத்தில் இருக்கும் Hazel McCallion இலகுரக இரயில் திட்டத்தை 2028 இறுதிக்குள் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Pearson சர்வதேச விமான நிலையத்திற்கு கடமையாற்றும் ஊழியர்களின் வசதிக்காக அதிகாலை, நள்ளிரவு, வார இறுதி நாட்களில் இயங்கும் ஒரு சிறப்புப் போக்குவரத்து வலையமைப்பை உருவாக்கவும் Bonnie Crombie உறுதியளித்தார்.

இந்த அறிவித்தல் Mississauga நகர முதல்வர் வேட்பாளர்களிடையே கடும் விமர்சனத்தை தோற்றுவித்துள்ளது.

தற்போதைய நகர முதல்வர் Carolyn Parrish உட்பட மொத்தம் 14  அங்கீகரிக்கப்பட்ட வேட்பாளர்கள் Mississauga நகர முதல்வர் பதவிக்கு போட்டியிடுகின்றனர்.

இதில் Carolyn Parrish, முன்னாள் நகர முதல்வர் Bonnie Crombie, முன்னாள் மாகாணசபை உறுப்பினரும், ஏழாம் வட்டார நகர சபை உறுப்பினருமான Dipika Damerla, 2024 நகர முதல்வர் தேர்தலில் இரண்டாவது இடத்தை பிடித்தவரும், இரண்டாம் வட்டார நகர சபை உறுப்பினருமான Alvin Tedjo ஆகியோர் பிரதான வேட்பாளர்களாக உள்ளனர்.

Related posts

மீண்டும் அதிகரித்தது வேலையற்றோர் விகிதம்

Lankathas Pathmanathan

நிறைவுக்கு வந்தது Liberal அமைச்சரவை சந்திப்பு

Lankathas Pathmanathan

ரஷ்யாவுடன் நீண்ட கால அமைதிக்கு உதவுமாறு உக்ரேன் கனடாவுக்கு அழைப்பு

Lankathas Pathmanathan

Leave a Comment