தேசியம்
செய்திகள்

தொடர்ந்து கனடாவில் அடையாளம் காணப்படும் Omicron தொற்றாளர்கள்!

COVID தொற்றின் புதிய மாறுபாடான Omicron தொற்றாளர்கள் தொடர்ந்து கனடாவில் அடையாளம் காணப்படுகின்றனர்.

கனடாவில் Omicron மாறுபாட்டின் முதல் இரண்டு தொற்றாளர்கள் ஞாயிற்றுக்கிழமை Ontarioவில் அடையாளம் காணப்பட்டனர்.

நைஜீரியாவுக்குச் சென்று திரும்பிய Ottawaவைச் சேர்ந்த இருவர் தென்னாப்பிரிக்காவில் முதன் முதலில் கண்டறியப்பட்ட இந்த புதிய மாறுபாட்டால் பாதிக்கப்பட்டதாக ஞாயிற்றுக்கிழமை சுகாதார அதிகாரிகள் அறிவித்தனர்.

வட அமெரிக்காவில் கண்டறியப்பட்ட முதல் Omicron மாறுபாடு இதுவாகும்.

Omicron மாறுபாட்டின் தொற்றாளர்கள் கனடாவில்!

இந்த புதிய மாறுபாட்டினால் பாதிக்கப்பட்ட மேலும்  இருவர் திங்கட்கிழமை Ottawaவில் அடையாளம் காணப்பட்டனர்.

இந்த நிலையில் இந்த மாறுபாட்டினால் பாதிக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் மேலும் இருவர் திங்கட்கிழமை அடையாளம் காணப்பட்டதாக தெரியவருகிறது.

Ontarioவின் தலைமை சுகாதார மருத்துவ அதிகாரி வைத்தியர் Kieran Moore இந்த அறிவித்தலை வெளியிட்டார்

இவர்களில் தொற்று உறுதியான இருவர் Ottawaவை சேர்ந்தவர்கள் எனவும் தொற்றால் பாதிக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் மேலும் இருவர்  Hamiltonனைச் சேர்ந்தவர்கள் எனவும் தெரியவருகிறது.

தவிரவும் திங்கட்கிழமை Quebecகில் Omicron மாறுபாட்டின் ஒரு தொற்றை சுகாதார அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.

கனடாவில் இதுவரை Ontario மற்றும்  Quebec ஆகிய மாகாணங்களில் இந்த புதிய மாறுபாடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

ஆனாலும் கனடா முழுவதும் உள்ள சுகாதார அதிகாரிகள் பயணக் கட்டுப்பாடுகளின் கீழ் உள்ள ஏழு தென்னாப்பிரிக்க நாடுகளில் ஒன்றிலிருந்து பயணம் செய்தவர்களை இலக்கு வைத்து சோதனைகளை முன்னெடுக்கின்றனர்.

தென்னாப்பிரிக்காவில் இருந்து Alberta திரும்பிய 150க்கும் மேற்பட்டவர்கள் Omicron மாறுபாடு குறித்த எச்சரிக்கை காரணமாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

புதிய Omicron மாறுபாடு குறித்த கவலைகள் அதிகரித்து வரும் நிலையில் தென்னாப்பிரிக்காவின் பல நாடுகளில் இருந்து கனடாவிற்குள் நுழையும் பயணிகளுக்கு கனடா கடந்த வெள்ளிக்கிழமை தடை விதித்தது குறிப்பிடத்தக்கது.

Related posts

தொற்றுக் காலத்தில் போதைப் பொருள் பயன்பாடு அதிகரித்துள்ளதாக சுட்டிக் காட்டு!

Gaya Raja

இந்துமத குருவுக்கு Toronto நகர முதல்வர் கௌரவம்

Lankathas Pathmanathan

ஸ்ரீலங்கா சுதந்திர தினத்தை எதிர்க்கும் வகையில் கனடாவில் வாகன ஊர்தி முற்றுகைப் போராட்டம்

Lankathas Pathmanathan

Leave a Comment