Omicron மாறுபாட்டின் தொற்றாளர்கள் கனடாவில்!

Omicron COVID மாறுபாட்டின் முதல் இரண்டு தொற்றாளர்களும் Ontarioவில் ஞாயிற்றுக்கிழமை அடையாளம் காணப்பட்டுள்ளனர். நைஜீரியாவுக்குச் சென்று திரும்பிய ஒட்டாவாவைச் சேர்ந்த இருவர் தென்னாப்பிரிக்காவில் முதன் முதலில் கண்டறியப்பட்ட இந்த புதிய மாறுபாட்டால் பாதிக்கப்பட்டதாக சுகாதார அதிகாரிகள் அறிவித்தனர். Omicron என்றும் அழைக்கப்படும் B.1.1.529 மாறுபாட்டின் கனடாவின் முதல் இரண்டு தொற்றாளர்களும் இவர்களாவார்கள். இவர்கள் இருவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக Ontarioவின் சுகாதார அமைச்சர் Christine Elliott, தலைமை சுகாதார மருத்துவ அதிகாரி வைத்தியர் Kieran Moore ஆகியோர் ஒரு கூட்டறிக்கையில் தெரிவித்தனர். கனடாவின் உறுதிப்படுத்தப்பட்ட முதல் இரண்டு Omicron மாறுபாடு குறித்து Ontario மாகாண சுகாதார அமைச்சருடன் பேசியதாக மத்திய சுகாதார அமைச்சர் Jean-Yves Duclos ஒரு அறிக்கையில் தெரிவித்தார். வட அமெரிக்காவில் கண்டறியப்பட்ட முதல் Omicron மாறுபாடு இதுவாகும்.   Download Premium WordPress Themes FreeDownload Nulled WordPress ThemesPremium WordPress Themes DownloadDownload Best WordPress Themes Free Downloadonline free coursedownload lenevo firmwarePremium WordPress Themes DownloadZG93bmxvYWQgbHluZGEgY291cnNlIGZyZWU=