தென்னாப்பிரிக்காவின் பல நாடுகளில் இருந்து கனடாவிற்குள் நுழையும் பயணிகளுக்கு தடை

தென்னாப்பிரிக்காவின் பல நாடுகளில் இருந்து கனடாவிற்குள் நுழையும் பயணிகளுக்கு கனடா தடை விதித்துள்ளது. COVID தொற்றின் மாறுபாடு குறித்த கவலைகள் அதிகரித்து வரும் நிலையில் இந்த முடிவை கனடா எடுத்துள்ளது. கடந்த 14 நாட்களில் தென்னாப்பிரிக்கா வழியாக பயணம் செய்த அனைத்து வெளிநாட்டினரின் நுழைவை கனடா தடைசெய்கிறது வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஒரு செய்தியாளர் சந்திப்பில் சுகாதார அமைச்சர் Jean-Yves Duclos  இந்த முடிவை அறிவித்தார். கடந்த 14 நாட்களில் தென்னாப்பிரிக்கா வழியாக பயணம் செய்தவர்களை தனிமைப்படுத்தி COVID சோதனைக்கு செல்லுமாறு அவர் கோரியுள்ளார். தென்னாப்பிரிக்கா, Mozambique, Namibia, Zimbabwe, Botswana, Lesotho மற்றும் Eswatini ஆகிய நாடுகளும் இதில் அடங்குகிறது. இந்த நபர்கள் எதிர்மறையான COVID சோதனை முடிவைப் பெறும் வரை தனிமைப்படுத்தலில் இருக்க வேண்டும் என அமைச்சர் வலியுறுத்தினார். இந்தப் பகுதிகளில் இருந்து கனடாவுக்கு நேரடி விமானங்கள் எதுவும் தற்போது இயங்கவில்லை என போக்குவரத்து அமைச்சர் Omar Alghabra தெரிவித்தார். இந்தப் பிராந்தியத்திலிருந்து கனடாவுக்கு வேறொரு நாட்டின் வழியாகத் திரும்பும்  கனேடியர்களும், நிரந்தர குடியிருப்பாளர்களும் மூன்றாவது நாட்டில் எதிர்மறையான COVID சோதனையை பெறவேண்டும் எனவும் அவர் கூறினார். கனடாவுக்கு வந்தவுடன் அவர்களும் தொற்றுக்கு சோதிக்கப்படுவார்கள் எனவும் சுகாதார அமைச்சர் கூறினார். அதேவேளை கனடியர்களை தென்னாப்பிரிக்காவிற்கு பயணம் செய்ய வேண்டாம் எனவும் வெளிவிவகார அமைச்சு கோரியுள்ளது. Download Nulled WordPress ThemesDownload Premium WordPress Themes FreePremium WordPress Themes DownloadDownload WordPress Themes Freelynda course free downloaddownload huawei firmwareDownload Best WordPress Themes Free Downloadonline free course