தேசியம்
செய்திகள்

Brian Mulroneyயின் இறுதிச் சடங்கு விவரங்கள் வெளியாகின

முன்னாள் கனடிய பிரதமரின் இறுதிச் சடங்குகள் குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளன.

கனடாவின் 18ஆவது பிரதமர் Brian Mulroney தனது 84ஆவது வயதில் February 29ஆம் திகதி காலமானார்.

அவருக்கு அரச முறையில் இறுதிச் சடங்கு March மாதம் 23ஆம் திகதி சனிக்கிழமை நடைபெறவுள்ளது.

இந்த இறுதிச் சடங்குகள் Montreal Notre Dame Basilicaவில் நடைபெற உள்ளது.

இதில் பிரதமர் Justin Trudeau, விளையாட்டு வீரர் டு Wayne Gretzky, தொழிலதிபர் Pierre Karl Peladeau, Brian Mulroneyனின் புதல்வி Caroline Mulroney, முன்னாள் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் James Baker, முன்னாள் Quebec மாகாண முதல்வர் Jean Charest ஆகியோர் அஞ்சலி உரையாற்றவுள்ளனர்.

அழைக்கப்பட்ட விருந்தினர்கள் மட்டுமே இறுதி நிகழ்வு மண்டபத்திற்குள் அனுமதிக்கப்படுவார்கள்.

பின்னர் குடும்பத்தினர் மாத்திரம் கலந்து கொள்ளும் நல்லடக்க நிகழ்வு Montrealலில் நடைபெறும்.

இறுதிச் சடங்குகள் நடைபெறும் பகுதியில் உள்ள வீதிகள் சில மூடப்படும் எனவும் அதிகரித்த காவல்துறையினரின் பிரசன்னம் அந்தப் பகுதியில் இருக்கும் எனவும் மத்திய அரசு அதிகாரிகள் கூறுகின்றனர்.

இரண்டு வார இடைவெளிக்குப் பின்னர் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவைக்குத் திரும்பும் திங்கட்கிழமை (18) முதல் அஞ்சலி நிகழ்வுகள் ஆரம்பமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Brian Mulroneyயின் பூதவுடல் செவ்வாய்க்கிழமை (19) காலை Ottawa எடுத்துச் செல்லப்படவுள்ளது

நாடாளுமன்றத்திற்கு எதிரே உள்ள Sir John A. Macdonald  கட்டிடத்தில் இரண்டு நாட்கள் அவரது பூதவுடல் அஞ்சலிக்காக வைக்கப்படும்.

அங்கு பிரதமர் Justin Trudeau, ஆளுநர் நாயகம் Mary Simon ஆகியோர் Brian Mulroneyயின் குடும்பத்தினருடன் இணைந்து செவ்வாய் காலை 10 மணிக்கு அஞ்சலி செலுத்துவர்.

அன்று மதியம் 12:30 முதல் 6 மணி வரையும் புதன்கிழமை (20) காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை பொதுமக்கள் அஞ்சலி செலுத்த ஏற்பாடாகியுள்ளது.

பின்னர் Montrealலின் St. Patrick’s Basilicaவிற்கு பூதவுடல் எடுத்து செல்லப்படும்.

அங்கு வியாழக்கிழமை (21) மதியம் 12 முதல் 6 மணி வரையும், வெள்ளிக்கிழமை (22) காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை பொதுமக்கள் அஞ்சலி செலுத்த ஏற்பாடாகியுள்ளது.

Related posts

NDP வரவு செலவு திட்டத்திற்கு ஆதரவாக வாக்களிக்கும்: Jagmeet Singh

வாகன திருட்டு விசாரணை: 51 பேர் கைது. 215 வாகனங்கள் மீட்பு.

Lankathas Pathmanathan

ரஷ்ய, பெலாரஷ் அரசாங்க ஆதரவாளர்கள் மீது புதிய பொருளாதாரத் தடைகள்

Lankathas Pathmanathan

Leave a Comment