தேசியம்
செய்திகள்

தனிமைப்படுத்தப்பட்டுள்ள Ontario முதல்வர்!

Ontario முதல்வர் Doug Ford தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.முதல்வரின் அலுவலக உதவியாளர் ஒருவர் COVID தொற்றால் பாதிக்கப்பட்டது உறுதியானது. இதனால் குறிப்பிட்ட உதவியாளருடன் நெருங்கிய தொடர்பில் இருந்த முதல்வர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.   Ford  திங்கட்கிழமையன்று பாதிக்கப்பட்ட ஊழியருடன் தொடர்பு கொண்டிருந்தார் என முதல்வர் அலுவலகம் தெரிவித்தது.

இந்த நிலையில் முதல்வர் COVID தொற்றுக்கு சோதனை செய்துள்ளார். ஆனாலும் முதல்வர் தொற்றால் பாதிக்கப்படவில்லை என சோதனை முடிவுகள் உறுதிப்படுத்துகின்றன. இருந்த போதிலும் அனைத்து பொது சுகாதார ஆலோசனைகளையும் முதல்வர் பின்பற்றுவார் என அவரது அலுவலகம் அறிவித்துள்ளது. 

Related posts

British Colombia மாகாண முதல்வர் பதவி விலகல்

கனடாவின் புதிய உச்ச நீதிமன்ற நீதிபதி விரைவில் நியமிக்கப்படவுள்ளார்

Lankathas Pathmanathan

பாலியல் சேவைகளுக்கு பணம் செலுத்தத் தவறியதாக தமிழர் ஒருவர் மீது குற்றச்சாட்டு

Lankathas Pathmanathan

Leave a Comment