தேசியம்
செய்திகள்

நான்காவது நாளாகவும் Ontarioவில் 200க்கும் அதிகமான தொற்றுக்கள்!

Ontarioவில் ஞாயிற்றுக்கிழமை மீண்டும் தொடர்ந்து நான்காவது நாளாகவும் 200க்கும் அதிகமான COVID தொற்றுக்கள் பதிவாகின.
ஞாயிற்றுக்கிழமை சுகாதார அதிகாரிகளினால் 218 தொற்றுக்கள் பதிவு செய்யப்பட்டன. முன்னதாக சனிக்கிழமை 258, வெள்ளிக்கிழமை 226, வியாழக்கிழமை 218 என தொற்றுக்கள் Ontarioவில் பதிவு செய்யப்பட்டன.
ஞாயிற்றுக்கிழமை இரண்டு மரணங்களும் பதிவாகியுள்ளன.
இதன் மூலம் Ontarioவின் தொற்றுக்களின் ஏழு நாள் சராசரியும் தொடர்ந்தும் அதிகரிக்கின்றது. ஞாயிற்றுக்கிழமை ஏழு நாள் தொற்றுக்களின் சராசரி 189ஆக அதிகரித்தது.
இதேவேளை ஞாயிற்றுக்கிழமை காலையுடன் 9 மில்லியனுக்கும் அதிகமானவர்கள் Ontarioவில் முழுமையாக தடுப்பூசி பெற்றுள்ளனர் என சுகாதார அமைச்சு உறுதிப்படுத்தியது.

Related posts

தைவான் நிலநடுக்கத்தில் கனடியர் ஒருவரை காணவில்லை?

Lankathas Pathmanathan

March இறுதிக்குள் Ontarioவில்நாளாந்த தொற்றின் எண்ணிக்கை 4,000 வரை அதிகரிக்கலாம்

Lankathas Pathmanathan

காட்டுத்தீ காரணமாக ஆயிரக்கணக்கானவர்கள் வெளியேற்றம்

Lankathas Pathmanathan

Leave a Comment