தேசியம்
செய்திகள்

2.3 மில்லியன் தடுப்பூசி இந்த வாரம் கனடாவை வந்தடைகிறது!!!

கனடா இந்த வாரம் மேலதிகமாக 2.3 மில்லியன் Pfizer தடுப்பூசிகளைப் பெறவுள்ளது.

கனடிய சுகாதார அதிகாரிகள் COVID தொற்றின் நான்காவது அலையை எதிர்கொள்ள காத்திருக்கும் நிலையில் இந்த அறிவித்தல் வெளியானது.
மத்திய அரசாங்கம் ஏற்கனவே 66 மில்லியனுக்கும் அதிகமான தடுப்பூசிகளை பெற்றுள்ளது. இது கனடாவில் தகுதிவாய்ந்த அனைவருக்கும் வழங்குவதற்கு போதுமான தடுப்பூசிகளின் எண்ணிக்கையாகும்.
கனடாவின் கடந்த ஏழு நாள் தொற்றின் சராசரி 640ஆகப் பதிவாகியுள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை வரை 80.3 சதவீதமான தகுதியுள்ள கனடியர்கள் குறைந்தது ஒரு தடுப்பூசியையும், 63.7 சதவீதமானவர்கள் முழுமையாகவும் தடுப்பூசியைப் பெற்றுள்ளனர்.

Related posts

மற்றுமொரு முன்னாள் வதிவிடப் பாடசாலையில் 182 கல்லறைகள் கண்டுபிடிப்பு!!!

Gaya Raja

தேசியத்தின் ஆசனப் பகிர்வு கணிப்பு

Gaya Raja

வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் அனைத்துலக நாளில் கனடாவில் நீதிக்கான நடைபயணம்!

Gaya Raja

Leave a Comment

error: Alert: Content is protected !!