தேசியம்
செய்திகள்

July மாதம் 1ஆம் திகதிக்குப் பின்னர் Ontarioவில் அதிக எண்ணிக்கையில் தொற்றுக்கள் பதிவு!

 Ontarioவில் தொடர்ந்தும் மூன்றாவது நாளாகவும் சனிக்கிழமை 200க்கும் அதிகமான COVID தொற்றுக்கள் பதிவாகின.
சனிக்கிழமை சுகாதார அதிகாரிகளினால் 258 தொற்றுக்கள் பதிவு செய்யப்பட்டன. முன்னதாக வெள்ளிக்கிழமை 226, வியாழக்கிழமை 218 என தொற்றுக்கள் Ontarioவில் பதிவு செய்யப்பட்டன.
July மாதம் 1ஆம் திகதி 284 தொற்றுக்கள் பதிவான பின்னர், வெள்ளிக்கிழமை அதிக எண்ணிக்கையில் தொற்றுக்களை சுகாதார அதிகாரிகள் பதிவு செய்தனர்.
சனிக்கிழமை மேலும் ஆறு மரணங்கள் பதிவாகின. இதன் மூலம் Ontarioவில் COVID மரணங்களின் எண்ணிக்கை 9,345ஆக அதிகரித்து.
ஏழு நாள் தொற்றுக்களின் சராசரியும் அதிகரித்து வருகின்றது. சனிக்கிழமை தொற்றுக்களின் ஏழு நாள் சராசரி 183ஆக பதிவானது. இந்த எண்ணிக்கை கடந்த வாரம் 159ஆக இருந்தது.

Related posts

Torontoவில் முதலாவது ஆட்டத்தில் Blue Jays அணி!

Lankathas Pathmanathan

முற்றுகை போராட்டம் ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தலாக இருந்தது: பிரதமரின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்

Lankathas Pathmanathan

AstraZeneca தடுப்பூசிகளை பெறவுள்ள பிரதமர், துணை பிரதமர், எதிர்க்கட்சி தலைவர்கள்

Gaya Raja

Leave a Comment

error: Alert: Content is protected !!